கிரிக்கெட் அணிக்கு விராட்கோலி கிடைத்து சிறப்பு - ஆஸ்திரேலிய கேப்டன்..!   - Seithipunal
Seithipunal


நேற்றுநடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா வெற்றி பெற்றது. இதில் பெங்களூருவில் நேற்று நடைபெற்ற 3வது போட்டியில் ரோகித் சர்மா, விராட் கோலி இருவரும் அசத்தலான ஆட்டத்தை ஆடினார்கள்.

ஆஸ்திரேலிய அணியின் சார்பாக விளையாடிய ஸ்டீவன் ஸ்மித் சதமடித்து அசத்தியிருந்தார். இந்த போட்டிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பின்ச் பேசியாவது, 

இந்திய கிரிக்கெட் அணிக்கு விராட்கோலி கிடைத்து சிறப்பு.. உலகின் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரராக கோலி இருந்து வருகிறார். உலகின் தலைசிறந்த பேட்டிங் வீரர்களில் 5 க்குள் ஒருவராக இருந்து வருகிறார். இவரது ஆட்டம் சிறப்பாக இருந்தது. அனுபவம் கொண்ட இந்திய வீரர்கள் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டனர்.  

Image result for ind vs aus seithipunal

ஷிகர் தவான் இல்லாத நிலையிலும், கோலியும், ரோஹித்தின் நிதானமும் ரன்களை அடுத்தடுத்து உயர்த்தியது. இருவரது பேட்டிங்கும் உயர் தரமாக இருந்தது. இரண்டு போட்டியிலும் பந்துவீச்சு மற்றும் இறுதி 10 ஓவர் பேட்டிங்கில் பல தவறுகளை இழைத்தோம். ராஜ்கோட் போட்டியில் இறுதி 10 ஓவரில் மோசமான பந்துவீச்சு... பெங்களூரில் கடைசி 10 ஓவரில் அடுத்தடுத்து 5 விக்கெட் குறிப்பிடத்தக்கது.

மைதானத்தில் பெங்களூர் மைதானம் நாங்கள் எதிர்பார்த்ததை போல அமையவில்லை. டாஸ் வென்ற நாங்கள் பேட்டிங் தேர்வு செய்ததற்கு பதில் பந்துவீச்சை தேர்வு செய்திருக்கலாம். எதிர்பார்த்ததை காட்டிலும் ஆடுகளம் மந்தமாகவும், வறண்டும் இருந்தது. இந்த ஆடுகளலத்தில் இந்திய வீரர்கள் நாங்கள் ரன்கள் எடுக்காமல் இருக்க டெத் பவுலிங் வீசியது சிறப்பான ஒன்றாகும். 

ஷமியுடைய யாக்கர், ஷைனி மற்றும் பும்ராவின் வேகப்பந்துவீச்சு நல்ல நெருக்கடியை தந்தது. இவர்கள் இருவரும் சிறப்பாக பந்துவீசினார்கள். சுழற்பந்து வீச்சாளர்களும் சிறப்பாக செயல்பட்டனர்  என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

australia captain about virat kohli


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->