நட்டு கம்மிங்., நட்டு கம்மிங்., 4வது டெஸ்ட் போட்டியில்., வெளியான பரபரப்பு தகவல்.!! - Seithipunal
Seithipunal


இந்திய - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் தற்போது 3 ஆட்டங்கள் நடந்து முடிந்துள்ளது. இந்த 3 ஆட்டங்களில் இந்திய அணிக்கு, வீரர்கள் தொடர்ந்து காயம் அடைவது பெரும் பின்னடைவை இந்திய அணிக்கு கொடுத்துள்ளது.

முகமது ஷமி, உமேஷ் யாதவ் காயத்தால் வெளியேறிய நிலையில், 3-வது டெஸ்டில் ஜடேஜா, ஹனுமா விஹாரி வெளியேறியுள்ளனர். முன்னதாக பயிற்சியின்போது கேஎல் ராகுல் காயம் அடைந்துள்ளார்.

மூன்றாவது டெஸ்ட்டின் முதல் இன்னிங்சில் சிறப்பாக பந்து வீசிய ஜடேஜா, பேட்டிங் செய்யும்போது இடது கை பெருவிரலில் எலும்பு நகர்வு ஏற்பட்டு, 2-வது இன்னிங்சில் பந்து வீசவில்லை. அடுத்த டெஸ்ட் ஆட்டத்தில் அவர் பங்கேற்பது சந்தேகம். வேக பந்து வீச்சாளர் பும்ராவும் 4 டெஸ்ட் ஆட்டத்தில் இருந்து விளக்கியுள்ளார்.

இந்நிலையில், பும்ராவுக்கு பதில் தமிழகத்தை சேர்ந்த நடராஜன் நிச்சயம் 4வது டெஸ்ட் ஆட்டத்தில் இடம்பெறுவர் என்று கிரிக்கெட் வட்டாரங்கள் செய்தி சொல்லி வருகின்றன. விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

இதேபோல்,  4-வது டெஸ்ட் ஆட்டத்தில் விஹாரிக்குப் பதில் சாஹா, மயங்க் அகர்வால், பிரித்வி ஷா ஆகியோரில் ஒருவர் களம் இறங்க உள்ளதாகவும், ஜடேஜாவுக்குப் பதில் ஷர்துல் தாகூர் களம் இறங்க வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று சமநிலையில் உள்ளதால், அடுத்து நடக்க போகும் ஆட்டத்தில் எந்த அணி வெற்றி பெறுகிறதோ அந்த அணி தொடரையும் வெல்லும் என்பதால் பெரிதும் எதிர்பார்ப்பில் இரு நாட்டு ரசிகர்கள் உள்ளனர். அதே சமயத்தில் ஆஸ்., தனது திருட்டு தனத்தை மூட்டை கட்டை வைக்கவில்லை என்றல் இந்த டெஸ்ட் ஆட்டம் ஆஸ்., அணிக்கு தகுந்த பாடத்தையும் புகட்ட இந்திய ரசிகர்கள் காத்து உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AUS vs IND 4TH TEST


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->