அதிவேக விக்கெட்கள்! சாதனை பட்டியலில் ஆடம் ஸாம்பா! - Seithipunal
Seithipunal



உலகக் கோப்பை தொடரின் ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகள் மோதிய லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி, தனது இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

இந்த ஆட்டத்த்தில் ஆஸ்திரேலியா தரப்பில் சிறப்பாக பந்துவீசி 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்திய ஆடம் ஸாம்பா ஒரு சாதனையையும் பதிவு செய்துள்ளார்.

ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள் எடுத்த சுழற்பந்து வீச்சுளார்கள் பட்டியலில், 89 போட்டிகளில் 150 விக்கெட்டுகள் எடுத்து ஐந்தாவது இடம்பிடித்து உள்ளார் ஆடம் ஸாம்பா.

இந்த பட்டியலில் முதல் இடத்தில் பாகிஸ்தான் வீரர் சாக்லைன் முஸ்தக் உள்ளார். அவர் 78 போட்டிகளில் 150 விக்கெட்களை எடுத்துள்ளார்.

இரண்டாவது இடத்தில் 80 போட்டிகளில் ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித் கான், 
மூன்றாவது இடத்தில் 84 போட்டிகளில் இலங்கை வீரர் அஜந்தா மெண்டிஸ்,
நான்காவது இடத்தில் 88 போட்டிகளில் இந்திய வீரர் குல்தீப் யாதவ் 150 விக்கெட்களை எடுத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AUS Bowler Adam zampa Fastest wicket


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->