2026 ஆசிய விளையாட்டு: தென் கொரியாவை வீழ்த்தி தங்கம் வென்றது இந்திய மகளிர் வில்வித்தை அணி — இந்தியாவின் 11-வது தங்கப் பதக்கம்!
Asian Games 2026 Indian Women's Recurve Archery Team Defeats South Korea to Win 11th Gold India Climbs to 7th Spot
ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில், இந்திய மகளிர் ‘ரீகர்வ்’ (Recurve) வில்வித்தை அணி பலம் வாய்ந்த தென் கொரிய அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றுத் தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றியுள்ளது.
இப்போட்டியில் கிடைத்த வெற்றியின் மூலம் இந்தியா தனது 11-வது தங்கப் பதக்கத்தைப் பதிவு செய்துள்ளது.
வெற்றி பெற்ற வீராங்கனைகள் & பதக்கப் பட்டியல்:
அங்கிதா பகத், கீர்த்தி மற்றும் கும்கும் மோகட் ஆகியோர் அடங்கிய இந்திய மகளிர் வில்வித்தை அணி இத்தொடரில் தொடக்கம் முதலே மிகச்சிறப்பான திறமையை வெளிப்படுத்தி இந்த வரலாற்று வெற்றியைப் பெற்றுத் தந்துள்ளது.
இந்த தங்கப் பதக்கத்தின் மூலம், ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் பதக்கப் புள்ளிப்பட்டியலில் இந்தியா 7-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
English Summary
Asian Games 2026 Indian Women's Recurve Archery Team Defeats South Korea to Win 11th Gold India Climbs to 7th Spot