3 நாள் 1022 ரன்! ஆனா அந்த 1 ரன்! ஜானியால் சோகமான ரசிகர்கள்! அனல்பறக்கும் ஆஷஸ் டெஸ்ட்! - Seithipunal
Seithipunal


சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் ஆஷஸ் டெஸ்ட் தொடர் வரலாற்று சிறப்புமிக்க ஒரு தொடராக இடம்பெற்றுள்ளது. 

வரலாற்றில் இந்த இரு அணிகளுக்கு இடையான இந்த அனைத்து தொடர்களுமே அனல் பறக்க நடந்துள்ளன. இருநாட்டுக்கு இடையே நடக்கும் போரில், எப்படி வீரர்கள் கடைசிவரை நின்று போராடுவார்களோ, அதேபோல களத்தில் இரு அணி வீரர்களும் வெற்றிக்காக, தோல்வியை தவிர்க்க போராடுவதை பார்க்கும் கிரிகெட் ரசிகர்கள் அவ்வளவு மனத்திருப்தி கிடைக்கும்.

இந்நிலையில், ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் 4-வது ஆட்டத்தில் ஆஸ்ரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 317ரன்கள் எடுத்தது. 

இதனையடுத்து இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சை ஆடியது. அதில் ஆட்டத்தின் இரண்டாவது நாள் முடிவில் இங்கிலாந்து அணி 72 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 384 ரன்கள் குவித்தது. 

நேற்று 3-வது நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 107.4 ஓவர்களில் 592 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அதிகபட்சமாக இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஸாக் கிராவ்லி 182 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 21 பவுண்டரிகளுடன் 189 ரன்கள் விளாசினார்.

ஜானி பேர்ஸ்டோ 4 சிக்ஸர்கள், 10 பவுண்டரிகளுடன் 99 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமலும், செஞ்சுரி போடமுடியாமலும் பரிதாபமாக நின்றது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. 

இவர் மட்டுமல்ல ஏற்கனவே  1995-ஆம் ஆண்டு ஆஷஸ் கிரிக்கெட் தொடரில் பெர்த்தில் நடைபெற்ற ஆட்டத்தில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் வாஹ் 99 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் பரிதாபமாக களத்தில் நின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 

பின்னர், 275 ரன்கள் பின்தங்கிய நிலையில் தனது 2வது இன்னிங்ஸை விளையாடத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் உஸ்மான் கவாஜா 18 ரன்னிலும், டேவிட் வார்னர் 28 ரன்னிலும், ஸ்மித் 17 ரன்னிலும், ஹெட் 1 ரன்னிலும் அடுத்தது ஆட்டமிழந்து வெளியேறினர்.

மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில், ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 4 விக்கெட் இழப்புக்கு 113 ரன்கள் எடுத்திருந்தது. 

எவ்வளவு போராடினாலும் இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலிய வெற்றிபெறுவது கடினம் என்பதே ஆட்டத்தின் நிலவரத்தை காட்டுகிறது.

மொத்தமாக இந்த 3 நாள் ஆட்டத்தில் இரு அணிகளும் 239 ஓவர்களில் 1022 ரன்களை அடித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ashes test 2023 eng vs aus 4th test jonny bairstow steve waugh 99


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->