ஏப்ரல் மாதத்திற்கான சிறந்த கிரிக்கெட் வீரர் மற்றும் வீராங்கனை..ஐசிசி அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஐசிசி ஏப்ரல் மாதத்திற்கான சிறந்த வீரர்களில் பரிந்துரை பட்டியலை கடந்த வாரம் வெளியிட்டது. இதில் தென்ஆப்பிரிக்கா வீரர் கேஷவ் மஹராஜ், இங்கிலாந்து ஆல்ரவுண்டர் சிமொன் ஹார்மர், ஓமன் பேட்ஸ்மேன் ஜதீந்தர் சிங் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

அதேபோல் சிறந்த வீராங்கனைக்கான விருது பட்டியலில் ஆஸ்திரேலிய பெண்கள் அணியின் விக்கெட் கீப்பரும், பேட்ஸ்மேனுமான அலிசா ஹீலி, இங்கிலாந்து ஆல் ரவுண்டர் நடாலி சிவியர், உகாண்டா ஆல்ரவுண்டர் ஜெனட் எம்பாபாசி ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

இந்த நிலையில் ஏப்ரல் மாதத்திற்கான சிறந்த வீரர் விருதிற்கு தென்னாப்பிரிக்காவின் கேஷவ் மஹராஜ் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக ஐசிசி அறிவித்துள்ளது. அதேபோல் சிறந்த வீராங்கனையாக ஆஸ்திரேலிய பெண்கள் அணியின் விக்கெட் கீப்பரும், பேட்ஸ்மனுமான அலிசா ஹீலி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

April Month icc awards announced


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->