பாகிஸ்தானை பஞ்சராக்கிய ஆப்கானிஸ்தான்! வரலாற்றில் முதல்முறையாக நடைபெற்ற முரட்டு சம்பவம்!  - Seithipunal
Seithipunal


ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான் அணிகள் இடையேயான மூன்று 20 ஓவர் போட்டிகள் கொண்ட தொடர் ஆனது ஐக்கிய அரபு நாடுகளில் நேற்று தொடங்கியது. நேற்று நடைபெற்ற முதல் 20 ஓவர் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி பாகிஸ்தான் அணியை 6விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் பாகிஸ்தானை முதல் முறையாக வீழ்த்தி அசத்தியிருக்கிறது. ஆப்கானிஸ்தானின் வெற்றியை தொடர்ந்து அந்த நாட்டு ரசிகர்கள் கண்ணீர் விட்டு மகிழ்ந்தனர். 

முன்னணி வீரர்களான பாபர் அசாம், முகம்மது ரிஸ்வான், பக்கர்ஜமான் உள்ளிட்டோர் ஆடாத நிலையில். சதாப் கான் அணியின் கேப்டனாக பாகிஸ்தான் அணி களம் இறங்கியது. முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 92 ரன்களை 9 விக்கெட்டுகளை இழந்து எடுத்திருந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக இமான் வாசிம் 18 ரன்கள் எடுத்தார். 7 பேர் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டம் இழந்தனர். ஆப்கானிஸ்தான் தரப்பில் ஃபருக், முஜிப், நபி ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டையும் வீழ்த்தி இருந்தனர். 

பின்னர் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி ஆரம்பம் முதலே அதிரடி எல்லாம் காட்டாமல், நிதானமாகவே விளையாடினார்கள், எட்ட வேண்டிய இலக்கு 100 குள்ளாகவே இருப்பதால் மிக நிதானமாக விளையாடியவர்கள், 18 வது ஓவரில் நான்கு விக்கெட்டுகளை இழந்து 98 ரன்கள் எடுத்து அணியை வெற்றி பெற செய்தனர். அந்த அந்தணியில் அதிகபட்சமாக முகமது நபி 38 பந்துகளில் 38 ரன்களை எடுத்தார். 

இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் ஆப்கானிஸ்தான் முதல் முறையாக பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இருக்கிறது. மைதானம் முழுதும் நிரம்பி இருந்த ஆப்கானிஸ்தான் ரசிகர்கள் இந்த வெற்றியை கண்ணீர் விட்டு தங்களது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Afghanistan beat Pakistan by 6 wickets in first time history


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->