ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி.. இந்தியா 4வது முறையாக சாம்பியன்.! - Seithipunal
Seithipunal


ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கிப்போட்டியில் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

10வது ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கிப்போட்டி ஓமனில் நடைபெற்று வந்தது. இதில் இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் நடப்புச் சாம்பியன் இந்திய அணி பாகிஸ்தான் அணியுடன் மோதியது.

ஆட்டத்தின் ஆரம்பம் முதலில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தியது. அந்த வகையில் 13 வது நிமிடத்தில் அங்கட் பீர் சிங் ஒரு கோல் அடித்தார். அதனைத் தொடர்ந்து இருபதாவது நிமிடத்தில் அர்ஜித் சிங் ஒரு கோல் அடித்தார்.

இதில் பாகிஸ்தான் அணியில் 37-வது நிமிடத்தில் அப்துல் பாஷாரத் ஒரு கோல் அடித்தார். இறுதியாக இரண்டு ஒன்று என்ற கணக்கில் இந்திய அணி நான்காவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

அந்த வகையில் இந்திய அணி 2004, 2008, 2005 மற்றும் தற்போது 2023 என நான்காவது முறையாக சாம்பியன் பட்டம் என்று சாதனை படைத்துள்ளது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

2023 Junior Asia Cup hockey India champion


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->