இந்தோனேசியா ஓபன் பேட்மிண்டன் போட்டி.. மலேஷியாவை வீழ்த்தி இந்தியா சாம்பியன்..! - Seithipunal
Seithipunal


இந்தோனேசியா ஓபன் பேட்மிட்டன் தொடரில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

இந்தோனேசியா ஓபன் பேட்மிட்டன் என்பது மலேசிய ஓபன் மற்றும் ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிட்டன் சாம்பியன்ஷிப்பிற்கு நிகரான மூன்றாவது மிகப்பெரிய பேட்மின்டன் போட்டி தொடராகும்.

இந்த நிலையில் இந்தாண்டுக்கான  பேட்மிண்டன் தொடர் இந்தோனிசியாவில் உள்ள ஜகார்த்தாவில் கடந்த 13ம் தேதி தொடங்கிய நிலையில் இன்றுடன் நிறைவடைந்தது.

இந்த தொடரில் உலக தர வரிசையில் முன்னணியில் உள்ள பல வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றனர். அந்த வகையில் இந்தியாவின் சார்பாக பி.வி.சிந்து, பிரணோய் உள்ளிட்ட பல வீரர்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில் ஆண்கள் இரட்டையர் பிரிவின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ராங்கிரெட்டி - சிராக் ஷெட்டி ஜோடி, மலேசிய உலக சாம்பியனான ஆரோன் சியா - சோ வூய் ஜோடியை எதிர்த்து விளையாடியது.

இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய ஜோடி 21-17, 21-18 என்ற நேர் செட் கணக்கில் மலேசியாவை வீழ்த்தி சாம்பியன் படத்தை வென்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

2023 indhonesia open badminton mens doubles India champion


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->