2023 உலகக் கோப்பை அட்டவணை வெளியீடு.. எந்தெந்த நேரங்களில் போட்டிகள்.? - Seithipunal
Seithipunal


2023 ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பை போட்டி இந்தியாவில் வரும் அக்டோபர் நவம்பர் மாதங்களில் நடைபெற உள்ளது. இதற்கான அட்டவணையை ஐசிசி நேற்று வெளியிட்டது.

இந்த உலக கோப்பை தொடரில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்கிறது. அந்த வகையில் இந்தியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, வங்கதேசம், பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், தென் ஆப்ரிக்கா ஆகிய 8 அணிகள் நேரடியாக தகுதி பெற்றுள்ளது. மேலும், மீதமுள்ள 2 அணிகளுக்கான தகுதி சுற்று போட்டிகள் ஜிம்பாப்வேவில் நடைபெற்று வருகிறது. 

இந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் மொத்தம் 48 போட்டிகள் நடைபெறுகின்றன‌. இதில், 6 போட்டிகள் மட்டும் பகலில் நடைபெறுகிறது. மீதமுள்ள அனைத்து போட்டிகளும் பகலிரவு போட்டிகளாக நடைபெற உள்ளன‌. பகலில் நடைபெறும் போட்டிகள் காலை 10:30 மணிக்கும், பகலிரவு போட்டிகள் மதியம் 2 மணிக்கு தொடங்குகிறது. இந்திய அணி விளையாடும் அனைத்து லீக் போட்டிகளும் பகலிரவு போட்டிகளாக விளையாடுகிறது.

இந்த உலகக் கோப்பை தொடர் மொத்தம் 10 மைதானங்களில் நடைபெறுகிறது. இதில் இந்திய அணி 9 மைதானங்களில் லீக் போட்டிகளை வெளியாகிறது. அந்த வகையில் ஹைதராபாத் மைதானத்தில் மட்டும் இந்திய அணி விளையாடவில்லை

குறிப்பாக இந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் அரையிறுதி மற்றும் இறுதி போட்டிக்கு ரிசர்வ் நாள் ஒதுக்கப்பட்டுள்ளது. மழை காரணமாக போட்டி நடைபெற முடியாத சூழல் ஏற்பட்டால் ரிசர்வ் நாளில் போட்டி நடத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

2023 ICC world cup shedule and timings


கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!



Advertisement

கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!




Seithipunal
--> -->