மறக்க முடியாத வெற்றி நாள்! சட்டையை கழற்றிய தாதா கங்குலி! அந்த தரமான சம்பவம் பற்றி தெரியுமா உங்களுக்கு?!  - Seithipunal
Seithipunal


கடந்த 2002 ஆம் ஆண்டு இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில் இதே நாளில் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் ஆட்டத்தில், இந்திய கேப்டன் சௌரவ் கங்குலி ஆக்ரோஷமாக கத்தி கூச்சலிட்டு, தனது சட்டையை கழட்டி சுழற்றி கொண்டாடிய தருணத்தை இன்றளவும் இந்திய ரசிகர்கள் மறக்க வாய்ப்பில்லை. குறிப்பாக 90களில் பிறந்தவர்களுக்கு அந்த ஆட்டம் ஒரு வெறித்தனமான பதிலடி கொடுத்த ஆட்டம் என்பது தெரியும்.

2002 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து அணி, ஆறு ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது.

மூன்றுக்கு - இரண்டு என்ற என்ற நிலையில், தொடரின் கடைசி ஆட்டத்தில் இந்திய அணியை இங்கிலாந்து அணி வீழ்த்தி தொடரை சமன் செய்தது.

இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த ஃபிலிண்டாப், மைதானத்திலேயே சட்டையை கழட்டி தலைக்கு மேல் சுற்றி தனது வெற்றி கொண்டாட்டத்தை கொண்டாடினார்.

இங்கிலாந்து அணி இந்த வெற்றி கொண்டாட்டம், இந்திய ரசிகர்களையும், கேப்டன் சவுரவ் கங்குலியையும் வேதனையில் ஆழ்த்தியது. 

அடுத்து எப்போது இங்கிலாந்து அணியுடன் ஆட்டம் வரும் என்று காத்திருந்த ரசிகர்களுக்கு அதே வருடம் அந்த நல்ல செய்தி வந்தது.

இந்தியா - இங்கிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையான முத்தரப்பு ஒரு நாள் தொடர் இங்கிலாந்து நாட்டில் நடைபெற்றது.

இதில் புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடித்த இந்திய அணியும், இங்கிலாந்து அணியும் இறுதிப் போட்டியில் நேருக்கு நேர் மோதின. 

இந்த ஒரு நாள் ஆட்டம் தான் இந்திய ரசிகர்களுக்கு மறக்க முடியாத ஒரு ஆட்டமாக அமையும் என்று, ஆட்டம் தொடங்கும் முன்பு யாருக்கும் தெரிந்திருக்காது.

ஆனால் இந்திய அணியின் கேப்டன் சவுரவ் கங்குலி, அன்றைய ஆட்டத்தில் ஒரு முடிவோடு களம் இறங்கி களமிறங்கி இருந்தார்.
 
டாஸ் வென்று முதலில் களமிறங்கிய இங்கிலாந்த அணி ஐந்து விக்கெட் இழப்பிற்கு 325 ரன்கள் சேர்த்தது. 326 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய வீரேந்திர சேவாக், சவுரவ் கங்குலி தங்களது அதிரடி ஆட்டத்தை ஆடினார்.

இதில் சவுரவ் கங்குலி வெறித்தனமாக ஆடினார். 10 பவுண்டரி, 1 சிக்ஸர் என 43 பந்துகளில் 60 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். 

வீரேந்திர சேவாக் 45 ரன்கள் ஆட்டம் இழக்க, ஒரு கட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட்களை இழந்து 146 ரங்களுடன் தடுமாறியது.

அப்போது யுவராஜ் சிங் உடன் கைகோர்த்த முகமது கைஃப்-ன் பாட்னர்ஷிப் இந்திய அணியை வெற்றி பாதைக்கு கொண்டு சென்றது.

42 ஓவரில் இந்திய அணி 267 ரன்கள் சேர்த்த போது, யுவராஜ் சிங் தனது 69 ஆவது ரன்னில் ஆட்டம் இழந்தார். அவரைத் தொடர்ந்து ஹர்பஜன்சிங் 15 ரன்னிலும், அணில் கும்பலே டக் ஆகியும் வெளியேறினர்.

ஆனால், இறுதி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்று, இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை சமாளித்து, 87 ரன்களை குவித்து, இந்திய அணியை வெற்றி பெற செய்தார் முகமது கைஃப். அவருக்கு மேன் ஆப் தே மேட்ச் பட்டமும் கிடைத்தது. 

மூன்று பந்துகள் மீதம் இருக்க இங்கிலாந்து அணியை வீழ்த்தி, நாட் வெஸ்ட் சாம்பியன் பட்டத்தையும் இந்திய அணி தட்டிச் சென்றது.

ஆட்டம் பற்றி பேசியதில் நம்ம தாதா கங்குலி செய்த சம்பவத்தை சொல்ல மறந்துவிட்டேன் பாருங்க., 

இந்திய அணி வெற்றிக்கான ரன் அடித்த, அடுத்த நொடியே கேலரியில் ஆட்டத்தை பார்த்துக் கொண்டிருந்த இந்திய அணியின் கேப்டன் சௌரவ் கங்குலி, தனது சட்டையை கழட்டி, தலையை சுற்றி, சுழற்றி ஆக்ரோஷமாக தனது கொண்டாட்டத்தை அப்போது வெளிப்படுத்தினார்.

அது கொண்டாட்டம் மட்டுமல்ல, இங்கிலாந்து அணி வீரர் ஃபிலிண்டாப்பிற்கு சவுரவ் கங்குலி கொடுத்த பதிலடி. இந்த உணர்ச்சி பூர்வமான நிகழ்வு இந்திய ரசிகர்களுக்கும், சவுரவ் கங்குலிக்கும் வாழ் நாளில் மறக்க முடியாத வரலாற்று நிகழ்வு என்று சொன்னால் மிகையாகாது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

2002 NatWest Series ind vs eng sourav ganguly


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->