உலகக்கோப்பை இறுதி போட்டி: ஒரே போட்டியில் பிரமாண்ட சாதனை படைத்த இந்திய 05 வீராங்கனைகள்..! - Seithipunal
Seithipunal


ஐ .சி.சி மகளிர் உலக கோப்பை போட்டியில் இன்று இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகள் இறுதியில் போட்டியில் பலப்பரீட்சை நடத்துகிறது. முதல் ஆட்டத்தில் இந்திய அணி 07 விக்கெட் இழப்பிற்கு 298 ரன்களை குவித்துள்ளது. இரண்டாவது ஆட்டத்தில் 299 என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கியுள்ள தென்னாப்பிரிக்கா மகளிர்அணி 05 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்களை எடுத்துள்ளது. 

இந்நிலையில், இந்த இறுதிப்போட்டியில் இந்தியா வீராங்களைகள் 05 பேர் பிரமாண்ட சாதனைகளை படைத்துள்ளனர். அந்த பட்டியல் கீழ்வருமாறு:

01. ஸ்மிருதி மந்தனா.

மகளிர் உலகக்கோப்பை தொடரின் ஒரு சீசனில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீராங்கனை என்ற சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன்பு 2017 உலகக்கோப்பையில் மிதாலி ராஜ் 409 ரன்கள் அடித்திருந்த நிலையில், அதனை கடந்து (410*ரன்கள்) சாதனை படைத்துள்ளார்.

02- தீப்தி சர்மா.

மகளிர் உலகக்கோப்பை தொடரின் ஒரு சீசனில் 200 ரன்கள் மற்றும் 15 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் வீராங்கனை என்ற பிரமாண்ட சாதனை  நட்சத்திர ஆல்ரவுண்டர் தீப்தி சர்மா படைத்துள்ளார்.

03. ஹர்மன்ப்ரீத் கவுர்.

மகளிர் உலகக்கோப்பை நாக் அவுட் போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த வீராங்கனையாக சாதனையை இந்திய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் படைத்துள்ளார்.

04- ஹர்மன்ப்ரீத்.

04 நாக் அவுட் இன்னிங்ஸ்களில் விளையாடி 331 ரன்கள் குவித்திருக்கும் ஹர்மன்ப்ரீத், ஆஸ்திரேலியா வீராங்கனை பெலிண்டா கிளார்க்கின் 330 ரன்கள் (6 இன்னிங்ஸ்) சாதனையை முறியடித்துள்ளார்.

05- ஷஃபாலி வெர்மா.

ஆடவர்-மகளிர் இரண்டு வடிவ கிரிக்கெட்டிலும் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் அரை சதமடித்த இளம் வயது வீரர் (21 வயது 278 நாட்கள்) என்ற சாதனையை இந்தியாவின் தொடக்க வீரர் ஷஃபாலி வெர்மா படைத்துள்ளார்.

06. ரிச்சா கோஷ்.

மகளிர் உலகக்கோப்பை தொடரின் ஒரு சீசனில் அதிக சிக்சர்கள் அடித்த வீராங்கனையாக ரிச்சா கோஸ் ரிச்சா முதலிடம் பிடித்துள்ளார். கோஷ் நடப்பு சீசனில் 12 சிக்சர்களை பறக்கவிட்ட ரிச்சா கோஸ், முதலிடத்தை டியன்ரா டோட்டின், லிசெல்லி உடன் பகிர்ந்துகொண்டுள்ளார்.

அத்துடன், தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான மகளிர் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்ட ஷஃபாலி மற்றும் ஸ்மிரிதி மந்தனா ஜோடி, இந்த சாதனையை படைத்த 02-வது ஜோடியாக சாதனை படைத்தது.

ஸ்மிரிதி மந்தனா - ஷஃபாலி வர்மா

இதற்கு முன்பு கடந்த 2022 உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியாவின் அலிசா ஹீலி மற்றும் ஹெய்ன்ஸ் இருவரும் இறுதிப்போட்டியில் 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

05 Indian players who achieved a huge feat in a single match in the World Cup final


கருத்துக் கணிப்பு

வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப்பணி...



Advertisement

கருத்துக் கணிப்பு

வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப்பணி...




Seithipunal
--> -->