அசைவ உணவை சாப்பிட்ட பிறகு ஒருவர் ஏன் கோயிலுக்கு செல்லக்கூடாது.? - Seithipunal
Seithipunal


அசைவ உணவை சாப்பிட்ட பிறகு கோயிலுக்கு ஏன் செல்லக்கூடாது?

மற்ற நாகரீகங்களில் எல்லாம் உணவு என்பது உடலில் உயிரை தக்க வைப்பதற்கும், தசைகளை பெருக்கி உடல் பலத்தை அதிகரிக்க செய்யவும் பயன்படுகிறது.

ஆனால் இந்திய கலாச்சாரத்தில் மட்டுமே உண்ணும் உணவை இறைவனின் அருட்பிரசாதமாக பாவிக்கும் தன்மை இருக்கிறது. பழந்தமிழ் இலக்கியங்களிலும் இறவாவரம் தரும் இறைவனின் அருட்பிரசாதம் என்கிற பொருள் தரும் வகையில் உணவு சாப்பிடுவதற்கு அமுது உண்ணல், அமுது செய்தல் என உணவை குறிப்பிடும் சொற்றொடர்கள் அதிகம் காண கிடைக்கின்றன.

நாம் உண்ணும் உணவுக்கும், மனதிற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. உதாரணமாக தயிர் அதிகமாக சாப்பிட்டால் தூக்கம் வருவது போன்ற உணர்வு ஏற்படுவதும், காரம் அதிகமாக சாப்பிட்டால் கோபம் வருவதையும் கூறலாம். அசைவ உணவுகள் ஜீரணமாக அதிக நேரம் எடுத்துக் கொள்ளும் என்பதால் அது மனதளவில் மந்தநிலையை ஏற்படுத்தும்.

பொதுவாக கோயிலுக்கு செல்லும் போது சுத்தமாக செல்ல வேண்டும். இங்கு சுத்தம் என்பது வெறும் உடலை மட்டும் குறிக்கவில்லை, மனதையும் சேர்த்துதான் குறிக்கிறது. மனதளவில் மந்தநிலையில் உள்ள ஒருவர் சூட்சும சக்திகள் நிலவும் கோயிலுக்குள் செல்லும் போது அந்த சக்திகளை உணரக்கூடிய ஆற்றலை அவர் இழந்து விடுவார்.

அசைவ உணவை சாப்பிட்ட பிறகு கோயிலுக்கு ஏன் செல்லக்கூடாது?

ஒவ்வொரு மனிதனும் அடைய வேண்டிய உயர்ந்த நிலையான ஞானம் எனப்படும் தெய்வீக நிலையை அடைவதற்கு மாமிச உணவு சாப்பிடுதல் பெரும் தடையாக இருப்பதாக ரிஷிகள், சித்தர்கள் தங்கள் நூல்களில் குறிப்பிட்டுள்ளார்கள்.

அசைவ உணவு சாப்பிடும் நபர்களின் உடல் மற்றும் மனம், பஞ்சபூதங்களிலிருந்து வெளிப்படுகின்ற இறை ஆற்றல் நிறைந்த பிராண சக்தி கிடைக்கப்பெறாமல் போகிறது.

குறிப்பாக கோயில்களில் இந்த தெய்வீக பிராண சக்தி அதிக அளவில் நிறைந்துள்ளது. அசைவ உணவு சாப்பிடுவதை அறவே நீக்கியவர்கள், சிறிதளவு சைவ உணவுகளை சாப்பிட்டு கோயில்களுக்கு செல்பவர்களின் உடல் மற்றும் மனம் இந்த சுத்தமான பிராண சக்தியை அதிகம் கிரகித்துக் கொள்ள முடிகிறது.

சைவ உணவுகள் இத்தகைய நன்மை தரும் சூட்சும சக்தியை உணரும் ஆற்றலை கொண்டது. எனவேதான், கோயிலுக்கு செல்லும் போது எளிமையான உணவை மிதமான அளவில் உண்டு, மனதில் உற்சாகத்துடன் இறைவனை தரிசிக்க செல்ல வேண்டும்.

நமது பாவங்களை போக்கி புண்ணிய பலன்களை பெருக்கி கொள்ள செல்லக்கூடிய இடம் கோயில் தான். அப்போது பிற உயிர்களை கொன்று செய்யப்படும் அசைவ உணவுகளை சாப்பிட்டுவிட்டு கோயில்களுக்கு செல்வதால் ஏற்கனவே செய்த பாவங்களோடு இந்த புதிய பாவமும் சேர்கின்றது.

எனவே முடிந்த வரை கோயிலுக்கு செல்லும் போது அசைவ உணவு சாப்பிடுவதை தவிர்ப்பது மிகவும் நன்மை தரும்.

ஒருவேளை அசைவ உணவை சாப்பிட்ட பின்னர் கோயிலுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டால், சாப்பிட்ட 3 அல்லது 4 மணி நேரத்திற்குப் பின்னர் குளித்துவிட்டு கோயிலுக்கு செல்வது நல்லது. 

முனீஸ்வரன், சுடலை மாடன் போன்ற அசைவ உணவு படையல்களை ஏற்கின்ற கிராம தெய்வங்கள், காவல் தெய்வங்கள் இருக்கும் கோயில்களுக்கு அசைவ உணவு சாப்பிட்டுவிட்டு செல்வதால் எந்த ஒரு பாதகங்களும் இல்லை.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

why we never go temple after eaten non veg food


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->