ஐயப்பன் ஸ்பெஷல்... யாரை குருசாமி என்று அழைக்கிறோம்?!  - Seithipunal
Seithipunal


கார்த்திகை மாதத்தில் தான் ஐயப்ப பக்தர்கள், ஐயப்பனுக்கு மாலை அணிந்து சபரிமலை செல்ல தயாராவார்கள். அவ்வாறு சபரிமலைக்கு மாலை அணிந்து செல்லும் பக்தர்கள் ஐயப்பனுக்கு விரதம் அனுஷ்டிக்கும் முறை குறித்து தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்களை பார்க்கலாம்.

யாரை குருசாமி என்று அழைக்கிறோம்?

சபரிமலைக்கு 18 முறைக்கு மேல் சென்று வந்தவர்கள் குருசாமி என்ற தகுதியை பெறுகிறார்கள். ஒரே ஆண்டில் பதினெட்டு முறை சென்றுவிட்டு வந்தால் அவர்களை குருசாமி என கூற முடியாது.

18 ஆண்டுகள் மகரவிளக்கு அல்லது மண்டல பூஜைக்கு கட்டு கட்டி, 41 நாட்கள் முதல் 60 நாட்கள் வரை விரதமிருந்து சென்று வருபவர்களே குருசாமியாக முடியும். இவர்கள் தங்கள் கையால் மற்ற ஐயப்பமார்களுக்கு மாலை அணிவிக்கலாம்.

இவர்கள் ஐயப்பனுக்கு மாலை போடவில்லை என்றாலும் நாள்தோறும் ஐயப்பனுக்கு பூஜை செய்து வர வேண்டும்.

நீலம், காவி அல்லது கருப்பு நிற துணியில் பூஜை பொருட்களை குருசாமி முன்னிலையில் நிரப்ப வேண்டும்.

துணியை இரண்டு பகுதியாக பிரித்து தேங்காய், பச்சரிசி, வாழைப்பழம், அவல், பொரி, சந்தனம், பத்தி, விபூதி, குங்குமம், மஞ்சள்பொடி, வெல்லம், கற்கண்டு, உண்டியல் காசு ஆகியவற்றை வைக்க வேண்டும்.

பின்முடியில் தனக்கு தேவையான உணவு பொருட்களை வைத்துக்கொள்ள வேண்டும். முடிந்தவரை இருமுடி தலையில் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.

கற்பூர தீபம் :

ஐயப்பனை கற்பூர தீபப்பிரியன் என்பர். சபரிமலை யாத்திரையின்போது அங்கு தங்கியிருக்கும் நாட்களில் மாலை நேரத்தில் கற்பூரம் ஏற்றி சரண கோஷம் ஒலித்து ஐயப்பனை வழிபட வேண்டும் என்பது கட்டாயமான விதிமுறையாகும்.

ஐயப்ப பக்தர்கள் தினமும் வழிபாடு செய்யும்போது சொல்ல வேண்டிய ஐயப்ப ஸ்லோகம் :

ஓம் மஹா ரூபாய நம
ஓம் க்ரூரத் ருஷ்டயே நம
ஓம் அனாமயாய நம
ஓம் த்ரிநேத்ராய நம
ஓம் உத் பலாகாராய நம

ஓம் காலஹந்த்ரே நம
ஓம் நராதிபாய நம
ஓம் கண்டேந்துமௌளிதநயாய நம
ஓம் கல்ஹாரகுஸஷும ப்ரியாய நம
ஓம் மதனாய நம.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

who is called gurusamy


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->