எந்தக் கிழமையில் எந்தெந்த பொருட்களை வாங்கினால் நன்மைகள் உண்டாகும்.?! - Seithipunal
Seithipunal


ஒவ்வொரு நாட்களுக்கும், ஒவ்வொரு கிழமைக்கும் ஒவ்வொரு கிரகத்தின் ஆளுமை இருக்கும். அந்த வகையில் நம் முன்னோர்கள் குறிப்பிட்டு வைத்துள்ள சில முக்கியமான விஷயங்களை இன்று வரையிலும் அன்றாட வாழ்வில் பின்பற்றி கொண்டு வருகின்றோம்.

அவ்வாறு அவர்கள் சொல்லியிருக்கும் குறிப்புகளின் படி எந்தக் கிழமையில் எந்தெந்த பொருட்களை வாங்கினால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதையும், எந்தெந்த பொருட்களை வாங்கக்கூடாது என்பதை பற்றியும் தெரிந்து கொள்வோம்.

திங்கட்கிழமை :

திங்கட்கிழமை சிவன் மற்றும் சந்திரனுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அன்று வெள்ளை பொருட்களை வாங்குவதால் குடும்பத்தில் அமைதியும், மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும். மேலும் தானியங்கள், மின்னணு பொருட்கள் போன்றவற்றை வாங்கக்கூடாது.

செவ்வாய்கிழமை :

செவ்வாய்கிழமை தேவன் மற்றும் ஸ்ரீஆஞ்சநேயருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்த நாள் நிலம் வாங்க, விற்க மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். ஆனால், தோல் பொருட்கள், உலோகங்கள் வாங்குவதற்கு இது நல்ல நாள் அல்ல.

புதன்கிழமை :

புதன்கிழமையில் புதன்பகவான், சித்தி, புத்தி ஆகியோரை வழிபட நன்மைகள் நடைபெறும். அன்று எழுதுபொருள், பச்சை காய்கறி, வீட்டு அலங்கார மற்றும் விளையாட்டு பொருட்கள் போன்றவை வாங்குவதன் மூலம் வீட்டில் எப்பொழுதும் நிறைய பொருட்கள் சேர்ந்து கொண்டிருக்கும். ஆனால், அன்று பாத்திரங்கள், மருந்து, அரிசி, மண்ணெண்ணெய் போன்றவற்றை வாங்குவதில் இருந்து விலகி இருங்கள்.

வியாழக்கிழமை :

வியாழக்கிழமை குரு பகவானை வணங்கி ஆசி பெறுவதற்கான சிறந்த நாளாகும். அன்று டிவி, ஃப்ரிட்ஜ், ஏசி, கூலர், கம்ப்யூட்டர், மொபைல் போன்ற மின் சாதனங்களை வாங்க நன்மையை அளிக்கும். இந்த நாளில் கண்ணாடி சம்பந்தமான பொருட்கள் மற்றும் மிகவும் கூர்மையான பொருட்கள் போன்றவற்றை வீட்டிற்குள் கொண்டு வரக்கூடாது.

வெள்ளிக்கிழமை :

வெள்ளிக்கிழமை தேவி ஜெகதம்பாவுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அன்று வாசனை திரவியம், அழகுசாதனப் பொருட்கள் போன்றவற்றை வாங்குவது நல்லது. இந்த தினத்தில் வாகனங்கள் வாங்குவது போன்ற விஷயங்களைத் தவிர்ப்பது நன்மையை அளிக்கும்.

சனிக்கிழமை :

சனிக்கிழமை சனி பகவானுக்கு உரிய நாளாகும். தோட்டம் சார்ந்த பொருட்கள், ஆடைகள் வாங்க சிறந்த நாளாக அமையும். மேலும், மரம் மற்றும் தோல் சம்பந்தமான பொருட்கள், வீட்டிற்குத் தேவையான தானியங்கள் இவற்றை வாங்குவதை தவிர்ப்பது உத்தமம்.

ஞாயிற்றுக்கிழமை :

ஞாயிற்றுக்கிழமை சூரிய பகவானின் அருளைப் பெறுவதற்கான சிறந்த தினமாகும். இந்த நாளில் கண்ணாடி, கிளாஸ் போன்ற கண்களைக் கவரும் பொருட்களை வாங்குவது சிறந்தது. சிவப்பு நிறம் கொண்ட பொருட்கள், கோதுமை, தளவாடங்கள், வாகனங்கள் போன்றவற்றை வாங்கக்கூடாது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

what Luck for which day pooja


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!


செய்திகள்



Seithipunal
--> -->