'பாதுகாப்பான தண்ணீர்’ என நம்பி குடித்தது விஷமா....? கருமாரியம்மன் கோவிலில் சுகாதார சீர்கேடு...! - Seithipunal
Seithipunal


திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் தரிசனம் செய்ய வரும் பக்தி மையம். பக்தர்களின் தாகத்தை தீர்க்கும் வகையில் கோவில் வளாகத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரம் நிறுவப்பட்டு, ‘பாதுகாப்பான குடிநீர்’ என்ற நம்பிக்கையில் மக்கள் அதை பயன்படுத்தி வந்தனர்.

ஆனால், தை மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையன்று கோவில் பக்தர்களால் நிரம்பியிருந்த வேளையில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று வெளிச்சத்துக்கு வந்தது. குடிநீர் எந்திரத்துக்குள் அட்டைப்பூச்சி, பல்லி, பாசி போன்ற அசுத்தங்கள் மிதந்து கிடப்பதை கண்ட பக்தர் ஒருவர் அதை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார்.

சில நிமிடங்களில் அந்த காட்சி வைரலாக பரவி, பக்தர்களிடையே கடும் அதிருப்தியை கிளப்பியது.‘சுத்தமான குடிநீர்’ என நம்பி அருந்திய தண்ணீர் இவ்வாறு சுகாதாரமற்ற நிலையில் இருப்பது பலரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

குறிப்பாக குழந்தைகள் மற்றும் முதியவர்கள் இதை பயன்படுத்தி வருவதால் உடல்நல பாதிப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாக பொதுமக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

எந்தவொரு அசம்பாவிதமும் நடக்கும்முன் உடனடியாக இயந்திரத்தை பராமரித்து, பாதுகாப்பான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

water they drank believing safe actually poisoned Unhygienic conditions Karumariamman temple


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?




Seithipunal
--> -->