தினம் ஒரு திருத்தலம்... எல்லாமே ஐந்து ஐந்து.. சிறப்புப்பெயர் கொண்ட தலம்.!! - Seithipunal
Seithipunal


அருள்மிகு விருத்தாச்சலம் பழமலைநாதர் கோயில் :

பழமலைநாதர் கோயில் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் கடலூர் மாவட்டத்திலுள்ள விருத்தாச்சலத்தில் அமைந்துள்ள சைவசமய சிவன் கோயிலாகும். சமயக்குரவர்களால் பாடல் பெற்ற இத்தலம் நடுநாட்டு சிவதலங்களில் முக்கியமானதாகும்.    

மாவட்டம் :

பழமலைநாதர் கோயில், விருத்தாச்சலம், கடலூர் மாவட்டம்.

கோயில் சிறப்பு :

இந்தக்கோயிலின் மிக முக்கிய சிறப்பு 5 என்கிற எண்ணாகும். ஐந்து மூர்த்தங்கள், இறைவனின் ஐந்து திருநாமம், ஐந்து விநாயகர், இறைவனை தரிசனம் கண்ட ஐவர், ஐந்து கோபுரம், ஐந்து பிரகாரம் (திருச்சுற்று), ஐந்து கொடிமரம், ஐந்து உள் மண்டபம், ஐந்து வெளி மண்டபம், ஐந்து வழிபாடு, ஐந்து தேர், தலத்தின் ஐந்து பெயர் என எல்லாமே ஐந்து ஐந்தாக அமைந்துள்ளது.

இந்தக்கோயிலில் உள்ள ஆழத்து விநாயகர், விநாயகரின் ஆறுபடை வீடுகளில் ஒன்று.

இந்தத் தலத்தில் உயிர்விடும் எல்லா உயிர்களுக்கும் இறைவி பெரியநாயகி தம்முடைய ஆடையினால் வீசி இளைப்பாற்ற இறைவன் பழமலைநாதர் பஞ்சாட்சர உபதேசத்தைப் புரிந்தருளி அந்த உயிர்களை தம்முடைய உருவமாக ஆக்கும் தலம்.

காசியை விட வீசம்(தமிழ் அளவை) புண்ணியம் அதிகம் என தல வரலாறு குறிப்பிடுகிறது. இதனால் விருத்தகாசி என்கிற சிறப்புப்பெயரும் இவ்வூருக்கு உண்டு.

கோயில் திருவிழா :

இக்கோயிலில் ஆடிப்பூர திருவிழா, வைகாசி வசந்த உற்சவம், மார்கழி திருவாதிரை, மாசிமகம் 10 நாள் பிரம்மோற்சவம் ஆகியவை மிகவும் சிறப்பாக நடைபெறுகின்றன.

பிரார்த்தனை :

மனநிம்மதி மற்றும் உடல் சம்பந்தப்பட்ட எந்த நோயானாலும் தீருகிறது. இத்தலத்து துர்க்கையம்மனை வழிபடுவோர்க்கு கல்யாண வரம் கைகூடப் பெறுகிறது. மேலும் குழந்தை வரம் மற்றும் குடும்ப ஐஸ்வர்யம் ஆகியவற்றுக்காகவும் இத்தலத்தில் பக்தர்கள் பிரார்த்தனை செய்து கொள்வது வழக்கமாக உள்ளது.

ஞாயிறு அன்று ராகு கால வேளையில் வடைமாலை சாற்றி இத்தலத்து பைரவரை வணங்கினால் அடுத்தடுத்து வரும் இடர்கள் துன்பங்கள் தூளாய்ப் போய்விடும்.

நேர்த்திக்கடன் :    

சுவாமிக்கு நல்லெண்ணெய், திரவியப் பொடி, பால், தயிர், பழச்சாறு, இளநீர், பஞ்சாமிர்தம், சந்தனம், பன்னீர், திருநீறு ஆகியவற்றால் அபிஷேகம் செய்யலாம். தவிர உலர்ந்த தூய வஸ்திரம் சாற்றலாம். இது தவிர சுவாமிக்கு சங்காபிஷேகம், கலசாபிஷேகம் ஆகியவையும் செய்யப்படுகிறது. 

கோயில் பிரசாதம் :

இக்கோயிலில் குங்குமம் பிரசாதமாக வழங்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

virudhagireewarar temple


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->