கருப்புநிறக் கண்ணன்.. 172 அடி கோபுரம்.. அருள்மிகு கிருஷ்ணர் (துவராகாநாதர்) திருக்கோயில்.! - Seithipunal
Seithipunal


இந்த கோயில் எங்கு உள்ளது?

குஜராத், அகமதாபாத் மாவட்டத்தில் உள்ள துவாரகை என்னும் ஊரில் அருள்மிகு கிருஷ்ணர் (துவராகாநாதர்) திருக்கோயில் அமைந்துள்ளது.

இந்த கோயிலுக்கு எப்படி செல்வது?

அகமதாபாத்தில் இருந்து சுமார் 439 கி.மீ தொலைவில் துவாரகை என்னும் ஊரில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது. இந்தியாவின் முக்கிய நகரங்களில் இருந்து அகமதாபாத்துக்கு பேருந்து வசதிகள் உள்ளன.

இந்த கோயிலின் சிறப்புகள் என்ன?

கருப்புநிறம் கொண்ட கண்ணன் மேற்கு நோக்கி நின்ற கோலத்தில் காட்சியளிப்பது இத்தலத்தின் தனிச்சிறப்பு. இவருக்கு எதிராக கண்ணனின் தாயார் தேவகி சன்னிதானம் உள்ளது.

இந்த கோயில் ஐந்து மாடிகளைக் கொண்டது. 60 அழகிய சிற்பங்களுடன் கூடிய தூண்கள் இம்மாடிகளைத் தாங்குகின்றன.

கீழே சன்னிதானமும், 172 அடி உயரம் உள்ள கோபுரம் மேல்மாடியிலும் அமைந்துள்ளது.

5000 ஆண்டுகள் பழமையான திருத்தலம் இதுவே என்று ஸ்ரீமத் பாகவதம் கூறுகிறது.

பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 101வது திவ்ய தேசம் ஆகும்.

இக்கோயில் ஏழு முக்தி தலங்களில் ஒன்றாக போற்றப்படுகிறது.

வேறென்ன சிறப்பு?

இக்கோயில் கோபுரத்தின் உச்சியில் முக்கோண வடிவிலான, சிவப்பு பட்டுத் துணியாலான சூரிய - சந்திர உருவங்கள் பதித்த 82 மீட்டர் நீளமுள்ள மிகப்பெரிய கொடி தினமும் மூன்று முறை ஏற்றி இறக்கப்படுகிறது.

இந்த தலம் தர்மம், அர்த்தம், காமம், மோட்சம் என்ற நான்கு புருஷார்த்தங்களின் நுழைவாயிலாகக் கருதப்படுவதால் துவாரகா அல்லது துவாரகாதீ என்று இது பெயர் பெற்றது.

இக்கோயிலில் துளசிக்கு தனிச்சன்னதி இருப்பது சிறப்பம்சமாகும்.

இந்த தலத்திற்கு குசங்கலீ, ஓகா (உஷா) மண்டல், ஜெகத்மந்திர் என்றும் பெயர்கள் உண்டு.

என்னென்ன திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது?

இக்கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

கோகுலாஷ்டமி, தீபாவளி, ஹோலி, குஜராத் புத்தாண்டு, மட்கோபாட் என்ற உறியடித்திருநாள் ஆகியவை சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

எதற்கெல்லாம் பிரார்த்தனைகள் செய்யப்படுகிறது?

பக்தர்கள் தங்களது பிரார்த்தனைகள் அனைத்தும் நிறைவேற இங்குள்ள கிருஷ்ணரை வழிபட்டு செல்கின்றனர்.

இத்தலத்தில் என்னென்ன நேர்த்திக்கடன்கள் செலுத்தப்படுகிறது?

இக்கோயிலில் வேண்டுதல்கள் நிறைவேறியதும் கிருஷ்ணருக்கு அபிஷேகம் செய்தும், வெண்ணெய் காப்பு சாற்றியும் நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Today special thuvaraganathar temple


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->