உங்கள் ஜாதகத்தில்... சூரியன், செவ்வாய் சேர்க்கை இருக்கிறதா?  கிரகச் சேர்க்கை...! - Seithipunal
Seithipunal


நவகிரகம் என்பது ஒன்பது ஆளுகைக்காரர்கள் எனப் பொருள்படும். பூமியிலுள்ள உயிர்க்கூறுகளை ஆளுகைக்கு உட்படுத்துகின்ற அண்டவெளிக்கூறுகளாக இவை கருதப்படுகின்றன.

நவகிரகங்களில் மொத்தம் 9 கிரகங்கள் உள்ளன. 

அவையாவன, 

சூரியன் 

சந்திரன்

செவ்வாய்

புதன்

குரு 

சுக்கிரன் 

சனி

ராகு 

கேது

இக்கிரகங்கள் ஒன்றோடு ஒன்று சேர்ந்து பல்வேறு பலன்களை நமக்கு அளிக்கின்றன. அந்தவகையில் நாம் இன்று சூரியனுடன் சேர்ந்து வரும் கிரகங்களின் பலன்களை பற்றி பார்க்கலாம்.

சூரியன் + சந்திரன் :

பயணங்கள் மேற்கொள்வதில் விருப்பம் கொண்டவர்கள்.

சிந்தனையாளர்களாகவும், பேச்சாளர்களாகவும் விளங்கக்கூடியவர்கள்.

எதிலும் சிறந்து விளங்கக்கூடிய ஆற்றல் கொண்டவர்கள்.

சஞ்சலமான எண்ணங்களை கொண்டவர்கள். 

சூரியன் + செவ்வாய் :

முன்கோபம் கொண்டவர்கள்.

எவருக்கும் தலை வணங்கும் குணம் உடையவர்கள்.

அச்சம் இல்லாதவர்கள்.

சகோதரர்களின் மூலம் ஆதாயம் அடையக்கூடியவர்கள்.

சூரியன் + புதன் :

கல்வியில் நாட்டம் கொண்டவர்கள்.

விகடகவியான பேச்சுக்களால் அனைவரையும் கவரக்கூடியவர்கள்.

வாக்குத்திறமை உடையவர்கள். 

தாய்மாமன் உறவுகளின் மூலம் ஆதாயம் அடையக்கூடியவர்கள். 

சூரியன் + குரு :

நேர்மையான செயல்பாடுகளை உடையவர்கள்.

பரந்த மனப்பான்மை கொண்டவர்கள்.

உயர் பதவிகளை வகிக்கக்கூடியவர்கள்.

அனைவரையும் ஒன்றாக கருதக்கூடியவர்கள். 

சூரியன் + சுக்கிரன் :

அலங்கார பொருட்களின் மீது விருப்பம் கொண்டவர்கள்.

வாகன யோகம் உடையவர்கள்.

பாசன வசதி உடையவர்கள்.

கண் சம்பந்தப்பட்ட குறைபாடுகள் இருக்கும்.

சூரியன் + சனி :

தந்தையிடம் கருத்து வேறுபாடு உண்டாகும்.

தொழிலில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும்.

கடினமான உழைப்பாளிகள்.

சூரியன் + ராகு :

அரசு தொடர்பான துறைகளில் நுணுக்கங்களை அறிந்தவர்கள்.

புதுவிதமான சிந்தனைகளை உடையவர்கள்.

அந்நிய பொருட்களின் மூலம் லாபம் அடையக்கூடியவர்கள்.

கண் சம்பந்தப்பட்ட குறைபாடுகள் இருக்கும்.

சூரியன் + கேது :

ஆன்மிகத்தில் நாட்டம் கொண்டவர்கள்.

மரங்கள் தொடர்பான செயல்களில் விருப்பம் கொண்டவர்கள்.

தனிமையை விரும்பக்கூடியவர்கள். 

கண் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படும்.

மேற்கூறிய அனைத்தும் பொதுவான பலன்களே ஆகும். அவரவர் லக்னங்களின் கிரக நிலைகளுக்கு ஏற்ப பலன்கள் மாறுபடும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

suriyan sukran serkkai.. kiraga serkkai


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->