வரப்போகும் சனிப்பெயர்ச்சி... குறைகளெல்லாம் நிறைகளாக்குவார்... யாருக்கு? - Seithipunal
Seithipunal


இதுவரை துன்பங்கள் மட்டும் அளித்து வந்த சனிபகவான் ராசிக்கு மூன்றாம் இடத்தில் வரும்போது துன்பங்களை அளிக்காமல் மாறாக இன்பங்களை மாரியை போல் தருகிறார்.

மாரியை போல் பலன் அள்ளித்தரக்கூடிய இந்த சனிதேவரை சகாய சனி என்று அழைக்கிறோம்.

மனதில் நாம் எண்ணிய எண்ணங்களை நிறைவேற்றுவார். 

இல்லங்களில் சுபநிகழ்ச்சிகளால் இன்பங்களை தரக்கூடியவர்.

எதிர்பார்த்த பண உதவிகள் சரியான நேரத்தில் கிடைக்கப்பெற்று இழந்த பொருட்களை மீட்க வைப்பார்.

சாணக்கியனைப் போல பல துறைகளில் அறிவு திறன்களை மேம்படுத்தி ஊக்கமும், உற்சாகமும் மற்றவர்களுக்கு கொடுக்கும் நிலைக்கு நம்மை உயர்த்துவார்.

குடிசை வீட்டை கோபுர வீடாக மாற்றக்கூடிய காரிய வள்ளல் ஆவார்.

ரோக சனி

சனிதேவர் ராசிக்கு ஆறாம் இடத்தில் சஞ்சாரம் செய்யும் இந்த நிலையே ரோக சனி என்று அழைக்கப்படுகிறது.

ரோக சனியானது சத்ரு ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் சத்ருக்களான எதிரிகள் பலம் இழந்து உங்களை வெற்றி அடைய செய்வார்.

இல்லங்களில் இன்பங்களை வழங்கி மன மகிழ்ச்சியை வழங்குவார். 

உடல் ஆரோக்கியத்தில் ஏற்பட்ட குறைகள் நீங்கி வலிமை அடையக்கூடிய சூழலை உருவாக்குவார்.

கையில் பணம் தாராளமாக இருப்பதால் கடன்கள் அடையும். தூர தேச பயணத்தால் லாபம் உண்டாகும்.

பணிகளில் மேன்மையை உருவாக்கி நெடுநாள் நினைத்த பல காரியங்களை செய்து முடிக்கும் ஆற்றலை கொடுப்பார்.

இந்த சனி இருக்கும் காலம் வாழ்க்கையில் முன்னேற்றமான பாதையை நமக்கு அருளி வழி நடத்தி செல்லும் பொன்னான காலமாகும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sani peyarchi 3


கருத்துக் கணிப்பு

சென்னையில் தொடர்ந்து அதிகரித்து வரும் கரோனா பாதிப்பு...
கருத்துக் கணிப்பு

சென்னையில் தொடர்ந்து அதிகரித்து வரும் கரோனா பாதிப்பு...
Seithipunal