பிறந்தது தை.. புதிய துவக்கம் யாருக்கெல்லாம் இன்று அதிர்ஷ்டம்.?! கவலைகள் நீங்கி மகிழ்ச்சி தரும் நாள்.! - Seithipunal
Seithipunal


இன்றைய (14-01-2022) ராசி பலன்கள்: 

மேஷம்:

திட்டமிட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். தாய்வழி உறவினர்களின் வழியில் ஆதரவு ஏற்படும். கூட்டு வியாபார பணிகளில் சிந்தித்து செயல்படவும். உத்தியோக பணிகளில் இருந்துவந்த மறைமுக எதிர்ப்புகளை அறிந்து வெற்றி கொள்வீர்கள்.  சொத்துக்களின் மூலம் புதிய தொழில் வாய்ப்புகள் ஏற்படும். சுகம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்

அஸ்வினி : ஆதரவு ஏற்படும். 

பரணி : சிந்தித்து செயல்படவும்.

கிருத்திகை : வாய்ப்புகள் ஏற்படும்.

ரிஷபம்:

உடன்பிறந்தவர்களிடம் அனுசரித்து செல்லவும். நண்பர்களின் வழியில் ஆதரவு கிடைக்கும். கோபத்தை குறைத்துக் கொள்வது தேவையற்ற பகைமையை தவிர்க்கும். தோற்றப்பொலிவில் மாற்றம் ஏற்படும். புதிய முயற்சிகளும், அதை சார்ந்த சிந்தனைகளும் அதிகரிக்கும். செய்கின்ற செயல்பாடுகளில் அனுபவ அறிவு மேம்படும். மகிழ்ச்சியான நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு

கிருத்திகை : அனுசரித்து செல்லவும். 

ரோகிணி : மாற்றம் ஏற்படும். 

மிருகசீரிஷம் : அறிவு மேம்படும்.

மிதுனம்:

குடும்ப உறுப்பினர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். உணவு சார்ந்த விஷயங்களில் விழிப்புணர்வு வேண்டும். எதிர்பாலின மக்களின் மூலம் அனுகூலமான சூழ்நிலைகள் உண்டாகும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் மாற்றம் ஏற்படும். உடனிருப்பவர்களின் தன்மைகளைப் புரிந்து கொள்வீர்கள். கால் பாதம் தொடர்பான இன்னல்கள் குறையும். நன்மையான நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : வெண்சாம்பல்

மிருகசீரிஷம் : விவாதங்களை தவிர்க்கவும். 

திருவாதிரை : அனுகூலமான நாள்.

புனர்பூசம் : புரிதல் உண்டாகும்.

கடகம்: மனதில் நினைத்த காரியங்கள் நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். உத்தியோக பணியில் பாராட்டுகள் கிடைக்கும். வியாபார பணிகளில் மேன்மை உண்டாகும். சிலருக்கு பூர்வீக சொத்துக்களால் லாபம் கிடைக்கும். புதுவிதமான லட்சியங்களை உருவாக்குவீர்கள். லாபம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

புனர்பூசம் : காரியங்கள் நிறைவேறும்.

பூசம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.

ஆயில்யம் : மேன்மை உண்டாகும்.

சிம்மம்: செயல்பாடுகளில் இருந்துவந்த கட்டுப்பாடுகள் குறையும். வியாபாரம் நிமிர்த்தமான பணிகளில் முதலீடுகள் அதிகரிக்கும். அரசு சார்ந்த செயல்பாடுகள் அலைச்சலுக்கு பின்பு நிறைவேறும். எதிர்பாராத பயணங்களின் மூலம் புதுவிதமான புரிதல் உண்டாகும். நெருக்கமானவர்களிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் மறையும். அமைதி வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை

மகம் : கட்டுப்பாடுகள் குறையும்.

பூரம் : அலைச்சல் உண்டாகும்.

உத்திரம் : கருத்து வேறுபாடுகள் மறையும்.

கன்னி: உறவினர்களின் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். மாணவர்களுக்கு அனுகூலமான பலன்கள் ஏற்படும். வியாபார பணிகளில் இருந்துவந்த மந்தத்தன்மை நீங்கும். உத்தியோக பணிகளில் புதுவிதமான முயற்சிகளும், இலக்குகளும் பிறக்கும். புகழ் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

உத்திரம் : செல்வாக்கு அதிகரிக்கும்.

அஸ்தம் : அனுகூலமான நாள்.

சித்திரை : இலக்குகள் பிறக்கும்.

துலாம்: வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. உடலில் மந்தத்தன்மையும், சோர்வும் காணப்படும். வியாபாரம் தொடர்பான ரகசியங்களை மற்றவர்களிடம் பகிராமல் இருப்பது நல்லது. பணம் சம்பந்தமான கொடுக்கல், வாங்கலில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் அனுசரித்து செல்லவும். உங்களின் பலம் மற்றும் பலவீனத்தை உணர்வீர்கள். கனிவு வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

 

சித்திரை : சோர்வு உண்டாகும்.

சுவாதி : சிந்தித்து செயல்படவும்.

விசாகம் : அனுசரித்து செல்லவும்.

விருச்சிகம்: வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் கைகூடும். தந்தைவழி உறவினர்களின் மூலம் அனுகூலமான சூழ்நிலை ஏற்படும். வெளிவட்டாரங்களில் உங்களின் மதிப்பு அதிகரிக்கும். வாழ்க்கைத்துணைவரின் வழியில் ஒத்துழைப்பும், மகிழ்ச்சியான செய்தியும் கிடைக்கப் பெறுவீர்கள். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் மாற்றம் ஏற்படும். வெற்றியான நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்

விசாகம் : வாய்ப்புகள் கைகூடும்.

அனுஷம் : அனுகூலமான நாள்.

கேட்டை : மாற்றம் உண்டாகும்.

தனுசு : நீண்ட நாட்களாக மனதை உறுத்திய பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். நெருக்கமானவர்களின் மூலம் அனுகூலமான சூழ்நிலைகள் உண்டாகும். நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெறுவீர்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிக்கு உண்டான பலன்கள் கிடைக்கும். எதையும் சமாளிக்க கூடிய தைரியமும், தன்னம்பிக்கையும் ஏற்படும். உற்சாகமான நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்

மூலம் : தீர்வு கிடைக்கும்.

பூராடம் : ஒத்துழைப்பு ஏற்படும்.

உத்திராடம் : தன்னம்பிக்கை பிறக்கும்.

மகரம்: மனதில் புதுவிதமான ஆசைகள் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் சாதகமான சூழ்நிலை ஏற்படும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். மனதிற்கு விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். சுபம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

உத்திராடம் : சாதகமான நாள்.

திருவோணம் : எண்ணங்கள் கைகூடும்.

அவிட்டம் : திருப்தியான நாள்.

கும்பம்: குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். பழைய பிரச்சனைகளுக்கு மாறுபட்ட முடிவு கிடைக்கும். வீடு, வாகனத்தை சீர் செய்வதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். பலதரப்பட்ட சிந்தனைகளின் மூலம் மனதில் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். மாணவர்களுக்கு அவ்வப்போது ஞாபக மறதி உண்டாகும். நிறைவான நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

அவிட்டம் : விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.

சதயம் : விரயங்கள் உண்டாகும்.

பூரட்டாதி : குழப்பங்கள் ஏற்படும்.

மீனம் : மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். புதிய மனை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் அமைதியின்மை உண்டாகும். இலக்குகளை நோக்கிய செயல்திட்டத்தை அமைப்பீர்கள். உங்களின் மீது அவ்வப்போது சிறு சிறு வதந்திகள் ஏற்பட்டு நீங்கும். கவனம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்

பூரட்டாதி : சிந்தனைகள் உண்டாகும்.

உத்திரட்டாதி : செயல்திட்டத்தை அமைப்பீர்கள்.

ரேவதி : வதந்திகள் ஏற்படும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pongal 2022 Rasipalankal


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->