வீட்டில் ஹோமம் செய்ததற்கான பலனை பெற.. இந்த விளக்கில் தீபமேற்றினால் போதும்.!  - Seithipunal
Seithipunal


பஞ்சபூதங்களின் அருள் கிடைக்கவும், கடவுளின் ஆசீர்வாதம் கிடைக்கவும் தான் பல்வேறு ஹோமங்களை செய்கின்றோம். ஆறு மாதத்திற்கு ஒரு முறையோ அல்லது வருடத்திற்கு ஒரு முறையோ ஹோமங்கள் செய்வது குடும்ப வாழ்க்கைக்கு மிகவும் நன்மையை கொடுக்கிறது. வீட்டிலிருக்கும் துன்பங்கள், கஷ்டங்கள், கண் திருஷ்டிகள், மனக்கஷ்டங்கள் அனைத்தையும் தீர்த்து வளமான வாழ்வை ஹோமங்களின் மூலம் பெறலாம்.

ஹோமத்திற்கு ஈடு இணையான பலன்களை கொடுக்கக்கூடியது பஞ்சகவ்ய விளக்கு. பஞ்சகவ்ய விளக்கில் தீபம் ஏற்றும் போது அதிலிருந்து வரும் புகையின் வாசம் ஹோமத்திலிருந்து வரும் வாசத்திற்கு நிகரானதாக இருக்கும்.

பஞ்சகவ்ய விளக்கிலிருந்து வரும் புகை வீடு முழுவதும் பரவ செய்து வீட்டில் இருக்கும் எல்லா எதிர்மறை ஆற்றல்களையும் வெளியேற்றி பணப்புழக்கத்தை அதிகரிக்க செய்யும்.

பஞ்சகவ்ய விளக்கேற்றும் முறை :

பஞ்சகவ்ய விளக்கை அரச இலை, செம்பருத்தி இலை, வாழையிலை அல்லது வெற்றிலை இதில் ஏதேனும் ஒரு இலையின் மேல் வைக்கவும். பின்பு நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி தீபம் ஏற்ற வேண்டும்.

இந்த பஞ்சகவ்ய விளக்கில் தீபம் ஏற்றும்போது அதிலிருந்து வரும் புகையின் வாசம் ஹோமத்திலிருந்து வரும் வாசத்திற்கு நிகரானதாக இருக்கும்.

இந்த விளக்கின் திரி எரிந்த பின்பு, விளக்கும் சேர்ந்து எரிய ஆரம்பிக்கும். விளக்கு எரிந்த பின்பு கிடைக்கும் சாம்பல் தெய்வீக விபூதிக்கு சமமானதாகும். இந்த திருநீறை பூசிக் கொள்வதால் நன்மைகள் ஏற்படும்.

எப்போதெல்லாம் பஞ்சகவ்ய விளக்கை ஏற்றலாம்?

பஞ்சகவ்ய விளக்கை கிருத்திகை, அமாவாசை, பௌர்ணமி போன்ற சிறப்பான நாட்களில் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வீட்டில் ஏற்றுவதால் கோ பூஜை மற்றும் லட்சுமி நாராயண பூஜை செய்ததற்கும், ஹோமம் நடத்துவதற்கும் சமமாக கருதப்படுகிறது. வீட்டில் கன்றுடன் கூடிய பசுவின் படம் அல்லது கோமாதா படத்தின் முன்பு இந்த விளக்கை ஏற்றி வழிபடலாம்.

வீட்டின் எதிர்மறை ஆற்றல்களை அடியோடு வெளியேற்றி சண்டை, சச்சரவுகளை நீக்கும். நேர்மறை ஆற்றல்களை நிரம்பி, லட்சுமி கடாட்சம் நிறைய செய்யும். மேலும், கடன் பிரச்சனைகள் குறைந்து வீட்டில் செல்வம் நிறைந்திருக்கும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Panja kaavya Vilakku For homam Homam Palankal


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->