பழனி முருகன் கோயிலில் இன்று முதல் சாமி தரிசன கட்டணம் ரத்து!
Palani Temple thaipusam Dharisana kattanam free
பழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா கடந்த 5-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அறுபடை வீடுகளில் மூன்றாவது படைவீடாக விளங்கும் பழனி, இந்த புனித நாளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும் தெய்வீகத் தலமாக மாறியுள்ளது.
விழாவையொட்டி தினந்தோறும் முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. பக்தர்கள் திரளாகக் கூடி, தங்க மயில், வெள்ளி காமதேனு உள்ளிட்ட வாகனங்களில் சாமி வீதி உலா கண்டு களிக்கின்றனர்.
நேற்று, திருவிழாவை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த பக்தர்கள் பாதயாத்திரையாக பழனியை அடைந்தனர். இன்றிரவு 7 மணிக்கு, பெரியநாயகி அம்மன் கோவிலில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் சிறப்பாக நடைபெற உள்ளது. தொடர்ந்து இரவு 9 மணிக்கு சாமி மணக்கோலத்தில் வெள்ளிரத புறப்பாடு நடைபெறும்.
நாளை தைப்பூச நாளன்று அதிகாலை சண்முகநதியில் தீர்த்தவாரி, மாலை 4.30 மணிக்கு தேரோட்டம் நடைபெறவுள்ளது.
விழாவின் முக்கிய அறிவிப்பாக, இன்று முதல் பிப்ரவரி 12-ந்தேதி வரை சாமி தரிசனத்திற்கான கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் அனைத்து வரிசைகளிலும் கட்டணமின்றி சாமி தரிசிக்கலாம் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
English Summary
Palani Temple thaipusam Dharisana kattanam free