ஓராண்டுக்கு முன்பே இந்தியா - பாகிஸ்தான் போரை கணித்த ஜோதிடர்! வைரலாகும் டிவிட்!
Operation Sindoor India Pakistan Conflict VIRAL X POST
இந்தியா–பாகிஸ்தான் இடையிலான தற்போதைய போர் பதற்ற சூழ்நிலைக்கு முந்தையதாகவே, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் பிரபல ஜோதிடர் பிரசாந்த் கினி எழுதிய முன்னறிவிப்பு எக்ஸ் பதிவு சமீபத்தில் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
ஜம்மு-காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தது, இருநாடுகளுக்கிடையேயான சிக்கலான போர் சூழ்நிலைக்குத் தூண்டிவிட்டது.
இதனை அப்படியே கடந்த ஆண்டு பிரசாந்த் கினி முன்கூட்டியே கணித்திருந்தார் என்பது பலரின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
அவர் பதிவில், “போர் ஏப்ரல் மாதத்தில் துவங்கும். பாகிஸ்தானுக்கு சீனா, துருக்கி, அமெரிக்கா ஆதரவாக இருக்கும். இந்தியாவுக்கு ரஷியா, இஸ்ரேல் ஆதரவாக இருந்தாலும் பெரிதாக உதவாது. கார்கில் போரைவிட மோசமாக இருக்கும். சீனா தனது J-20 போர் விமானங்களை, துருக்கி ட்ரோன்களை பயன்படுத்தும்,” என எழுதியிருந்தார்.
மேலும், 2025 ஏப்ரல், மே மாதங்கள் மனித இனத்திற்கு கடுமையான காலமாக அமையும்; புதிய நோய்கள், உணவுத்தட்டுப்பாடு, அணு ஆயுத அச்சுறுத்தல்கள் போன்றவையும் எழும் எனவும் அவர் கணித்திருந்தார்.
தற்போது மீண்டும் பேசப்படத் தொடங்கிய ஜோதிடர், இந்தப் போரில் அமெரிக்கா வெல்லும் என்றும், போர் 29 நாட்கள் நீடிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Operation Sindoor India Pakistan Conflict VIRAL X POST