அதிர்ஷ்ட தேவதையை அழைக்க.. மகா லக்‌ஷ்மி வழிபாடு.. வெள்ளிக்கிழமையில் இப்படி எளிமையாக செய்யுங்கள்.!  - Seithipunal
Seithipunal


உழைப்பால் உயர்ந்தவர்களும் திடீர் அதிர்ஷ்டத்தால் உயர்ந்து நல்ல நிலைக்கு இருப்பவர்களும் இருக்கின்றனர். ஆனால், ஒரு சிலர் எவ்வளவுதான் உழைத்தாலும் அதற்கேற்ற பலனை அனுபவிக்க முடிவதில்லை.

திறமையானவர்களாகவும், மிக உழைப்பாளியாகவும் இருந்தால் கூட சிலரால் வெற்றியடைய முடிவதில்லை. இதற்கு காரணம் அதிர்ஷ்டமின்மை தான். 

எனவே, அந்த அதிர்ஷ்டத்தை நம்மிடம் வைத்துக் கொள்ள என்னவெல்லாம் செய்யலாமென பார்க்கலாம்.

 மாகாலட்சுமி வழிபாட்டை சிறப்பாக செய்தால், அந்த வீட்டில் அதிர்ஷ்ட லக்‌ஷ்மி ஐக்கியமாகி விடுவாள். 

எப்படி செய்யலாம்?

பொதுவாகவே வெள்ளிக்கிழமை என்றாலே, அனைவரது வீடும் சுத்தமாகவும் மிகவும், மங்களகரமாகவும் இருக்கும். அப்படி மங்களகரமான வெள்ளிக்கிழமை நாளில் அல்லது நல்ல பௌர்ணமி தினத்தில் பின்வரும் பூஜையை செய்யலாம். 

மகாலட்சுமி ஆந்தையுடன் இருக்கும் திருவுருவப்படம் அதிர்ஷ்ட தேவதை என்று கூறப்படுகிறது. இந்த படம் இருக்கும் வீட்டில் நிச்சயமாக அதிர்ஷ்டம் இருக்கும் என நம்பப்படுகிறது.

மகாலட்சுமியின் படத்தை கிழக்கு பார்த்தவாறு வைத்து, பின்னர், அந்த படத்திற்கு முன் ஒரு கலச சொம்பில் பச்சரிசியை நிரப்ப வேண்டும்.

அந்த பச்சரிசியின் மேல் 9 குண்டு மஞ்சள்களை அடுக்கி வைத்து, அந்த மஞ்சளுக்கு மேலே சந்தனமும், ஜவ்வாதும், குங்குமமும் வைக்க வேண்டும்.

அதன் பின் வாசனை மிகுந்த பூக்களால் 108 முறை 'ஓம் மகாலட்சுமியை நமஹ" என்ற மந்திரத்தை கூறி கலசதிற்கு அர்ச்சனை செய்ய வேண்டும்.

உதிரி புஷ்பங்கள் கிடைக்கவில்லை என்றால் தாழம்பூ குங்குமத்தால் அர்ச்சனை செய்யலாம்

ஒரு வெற்றிலையின் மீது மந்திரம் சொல்லி அர்ச்சனை செய்த பின் அந்த குங்குமத்தை அன்றாடம் பெண்கள் நெற்றியில் இட்டுக் கொண்டால் வீட்டில் அதிர்ஷ்டம் மற்றும் ஐஸ்வர்யம் பெருகும்.

இந்த பூஜையை ஒவ்வொரு மாதமும் வரக்கூடிய பௌர்ணமி தினத்தில் செய்யலாம். அல்லது வெள்ளிக்கிழமையிலும் செய்யலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Mahalakshmi vazhipadu For adhirsha Devadhai


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->