நெற்றி மற்றும் புருவத்தில் மச்சம் இருந்தால் என்ன பலன்?
macham palan 10
பெண்களுக்கு நெற்றியின் வலது புறத்தில் சிவந்த மச்சம் இருந்தால் தன்னம்பிக்கை உடையவர்களாக இருப்பார்கள். மற்றவர்களை அடக்கி ஆளும் தன்மை கொண்டவர்கள். எதிலும் தைரியத்துடன் செயல்படக்கூடியவர்கள்.
ஆணின் நெற்றிப்பொட்டு இடத்தில் மச்சம் இருந்தால் வாழ்க்கை போராட்டமாக இருக்கும். எதற்கும் பயம் கொள்ள மாட்டார்கள். பல இன்னல்களை கடந்து எதிர்பார்த்த செயலை செய்து முடிப்பார்கள்.
புருவத்தில் மச்சம் இருந்தால் என்ன பலன்?
பொதுவாக புருவத்தில் மச்சம் இருந்தால் சிறப்பான வளர்ச்சி உடையவர்களாக இருப்பார்கள்.
புருவத்தின் இடப்புறத்தில் மச்சம் இருந்தால் என்ன பலன்?
பெண்களுக்கு...
பெண்களின் புருவத்தின் இடப்புறத்தில் மச்சம் இருந்தால் அவர்கள் தங்களுடைய வாழ்க்கையில் துன்பத்தைவிட இன்பத்தைத்தான் அதிகமாய் அனுபவிப்பார்கள். அவர்கள் செய்யும் தவறுகளை யாராவது சுட்டிக் காட்டினால் அதற்காக அவர்கள் மீது கோபப்பட மாட்டார்கள். தங்களை திருத்திக் கொள்ள முயல்வார்கள்.
அவர்கள் சிக்கனமாய் இருப்பார்கள். தேவையில்லாத செலவுகளை தவிர்த்து அவசியமான செலவுகளை மட்டும் செய்வார்கள். சேமிப்பதில் அதிக ஆர்வமும், கவனமும் செலுத்துவார்கள். அவர்கள் நன்கு சிந்தித்து செயல்பட்டு பல காரியங்களை வெற்றிகரமாய் செய்து முடிப்பார்கள்.
அந்த வெற்றிகளை கண்டு மகிழ்ச்சியடைவார்களோ தவிர ஒருபோதும் கர்வப்படமாட்டார்கள். எப்போதும் அமைதியாய் நடந்து கொள்வார்கள்.
ஆண்களுக்கு...
ஒருவருடைய இடப்புருவத்தில் மச்சம் இருந்தால் அவர், வாழ்க்கையில் இன்பத்தைவிட துன்பத்தை அதிகமாய் அனுபவிப்பர். அவர்கள் எந்த கருத்தை சொன்னாலும் புரிந்து கொள்ள மாட்டார்கள். முட்டாள்தனமாய் பேசி மற்றவர்களுடைய கேலிக்கைக்கு ஆளாவர்.
அவருக்கு முன்கோபம் அதிகமாய் இருக்கும். கோபம் வந்துவிட்டால் என்ன பேசுவது? என்றே புரியாமல் பேசுவர். எவர் சொல்லுக்கும் கட்டுப்பட மாட்டார்கள்.