மாசி மகம் : கும்பகோணம் மகாமக குளத்தில் மாசிமக தீர்த்தவாரி.! - Seithipunal
Seithipunal


கோவில் நகரமான கும்பகோணத்தில் சிவன் கோயில்கள் மற்றும் பெருமாள் கோயில்கள் உள்ளது. இந்தக் கோவில்களில் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மகாமக விழாவும், ஒவ்வொரு வருடமும் மாசிமக விழாவும் நடைபெறுவது வழக்கம். 

அதன்படி, இந்தாண்டிற்கான மாசிமக விழா கடந்த 25-ம் தேதி சிவன் கோவில்களிலும், கடந்த 26-ம் தேதி பெருமாள் கோயில்களிலும் மிக பிரமாண்டமாக கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழா பத்து நாட்கள் நடைபெறுகிறது.

இதைத்தொடர்ந்து, பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா காட்சியும் நடைபெறுகிறது. இந்த விழாவின் சிகர நிகழ்ச்சியான நேற்று சண்டிகேஸ்வரர், காளஹஸ்தீஸ்வரர், காசி விஸ்வநாதர், கவுதமேஸ்வரர், அபிமுகேஸ்வரர் மற்றும் சோமேஸ்வரர் உள்ளிட்ட கோவில்களில் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. 

இந்நிலையில், இந்த மாசி மக விழாவின் மிக முக்கிய நிகழ்வான மாசிமக தீர்த்தவாரி இன்று காலை மகாமக குளத்தில் நடைபெற்றது. மேலும், சக்கரபாணி, ராஜகோபால சுவாமி, ஆதிவராகப் பெருமாள் உள்ளிட்ட பெருமாள் கோயில்களின் தேரோட்டம் இன்று காலை நடைபெறுகிறது. அதன் பின்னர், சாரங்கபாணி கோயில் பொற்றாமரைக் குளத்தில் தெப்போற்சவ விழாவும் நடைபெற உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

kumbakonam magamaga kulam therthawari for masi magam


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->