திருச்சி | வருடத்திற்கு 3 நாள் : நேரடியாக மூலவரை தொடும் சூரிய ஒளி.! குவியும் பக்தர்கள்.! - Seithipunal
Seithipunal


திருச்சியை அடுத்த கல்லணை சாலை, சர்க்கார் பாளையம் கிராமத்தில் கரிகால சோழனால் கட்டப்பட்ட பழமையான காசிவிஸ்வநாதர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆவணி மாதத்தில் 7, 8 மற்றும் 9-ம் தேதிகளில் சூரியபூஜை வழிபாடு நடைபெறுவது வழக்கம். 

ஆண்டுதோறும் வேறு எந்த நாட்களிலும் இல்லாதவாறு ஆவணி மாதம் 7, 8 மற்றும் 9-ம் தேதிகளில் சூரியனின் ஒளிக்கதிர்கள் மூலஸ்தானத்தில் உள்ள காசிவிஸ்வநாதர் சிவலிங்கத்தின் மீது நேரடியாக விழும். இச்சமயத்தில் காசிவிஸ்வநாதரை வழிபாடு செய்தால் திருமணத்தடை மற்றும் பிணிகள் நீங்கி பல நற்பலன்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. 

இந்த வகையில், ஆவணி மாதம் 7-ம் நாளான இன்று காசி விஸ்வநாதர் கோவிலில் சூரியபூஜை வழிபாடு நடைபெறுகிறது. சூரிய ஒளிக்கதிர்கள் மெல்ல, மெல்ல வந்து மூலஸ்தானத்தில் உள்ள காசிவிஸ்வநாதர் சிவலிங்கத்தின் மீது நேரடியாக விழுந்து பிரதிபலிக்கச் செய்தது. இதன் பின்னர் சூரிய வழிபாடு நடைபெற்றது. இதனை தொடர்ந்து காசிவிஸ்வநாதருக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. 

இந்த சூரியபூஜை வழிபாட்டில் காசிவிஸ்வநாதரை தரிசிக்க திருச்சி மட்டுமில்லாமல் வெளியூர்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்துள்ளனர். தொடந்து மூன்று நாட்கள் சூரியோதயத்தின் போதும் இந்த வழிபாடு நடைபெறுவதால் ஏராளமான பக்தர்கள் நாளை மற்றும் நாளை மறுதினம் கோவிலில் தங்கி வழிபாடு செய்ய உள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kallanai kaasi veshvanathar aalaiyam sirappu


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->