ஐயப்பனின் பதினெட்டு படி உணர்த்தும் குணங்கள்.. தெரிந்து கொள்ளுங்கள்..!! - Seithipunal
Seithipunal


ஐயப்பனின் பதினெட்டு படி உணர்த்தும் குணங்கள் :

1. மோகம் :

பற்று உண்டானால் பாசம், மோகம் ஏற்பட்டு புத்தி நாசமடைந்து அழிவு ஏற்படும் என்பதை உணர்த்துகிறது.

2. குரோதம் :

கோபம் குடியைக் கெடுத்து, கோபம் கொண்டவனையும், அவன் சுற்றத்தையும் சேர்த்து அழித்துவிடும் என்பதை உணர்த்துகிறது.

3. லோபம் :

பேராசைக்கு இடம் கொடுத்தால் இருப்பதும் போய்விடும், ஆண்டவனை அடைய முடியாது என்பதை உணர்த்துகிறது.

4. மதம் :

யானைக்கு மதம் பிடித்தால் ஊரையே அழித்துவிடும். அந்த யானையை அப்போது யாராவது விரும்புவார்களா? அதுபோல் வெறி பிடித்தவனை ஆண்டவன் வெறுத்துவிடுவான் என்பதை உணர்த்துகிறது.

5. மாத்ஸர்யம் :

மனதில் பொறாமையை நிலைநிறுத்தி வாழ்பவனுக்கு, வேறு பகையே வேண்டாம். அதுவே அவனை அழித்துவிடும் என்பதை உணர்த்துகிறது.

6. வீண் பெருமை :

இது பெரிய அசுர குணத்தை உருவாக்கும். ஆகவே, அசுர குணமானது நமக்குள் இருக்கக்கூடாது என்பதை உணர்த்துகிறது.

7. அகந்தை :

தான் என்ற அகந்தை கொண்டவன் ஒருபோதும் வாழ்வில் முன்னேற முடியாது. அகந்தை என்பது முடிவில்லா ஒரு சோகச்சுமை என்பதை உணர்த்துகிறது. 

8. சாத்வீகம் :

விருப்பு, வெறுப்பு இன்றி கர்மம் செய்தல் வேண்டும் என்பதை உணர்த்துகிறது.

9. ராஜஸம் :

அகங்காரத்தோடு கருமம் செய்தல் கூடாது என்பதை உணர்த்துகிறது.

10. தாமஸம் :

அற்ப புத்தியுடன் செயல்படுவது, மதி மயக்கத்தால் தீமை செய்வது ஆகியவை கூடாது என்பதை உணர்த்துகிறது.

11. ஞானம் :

எல்லாம் ஆண்டவன் செயல் என்று அறியும், பேரறிவு என்பதை உணர்த்துகிறது.

12. மனம் :

நம் மனம் கெடாது, பிறர் மனம் வருந்தாது வாழவேண்டும். எப்போதும் ஐயன் நினைவே மனதில் இருக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது.

13. அஞ்ஞானம் :

உண்மைப் பொருளை அறிய மாட்டாது மூடி நிற்கும் இருள் என்பதை உணர்த்துகிறது.

14. கண் :

ஆண்டவனை கண்கூட பார்க்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது.

15. காது :

ஆண்டவனின் மேலான குணங்களை கேட்டு, அந்த ஆனந்த கடலில் மூழ்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது.

16. மூக்கு :

ஆண்டவனின் சன்னதியிலிருந்து வரும் நறுமணத்தை முகர வேண்டும் என்பதை உணர்த்துகிறது.

17. நாக்கு :

கடுஞ்சொற்கள் பேசக்கூடாது என்பதை உணர்த்துகிறது.

18. மெய் :

இரு கரங்களால் இறைவனை கைகூப்பி தொழ வேண்டும். கால்களால் ஆண்டவன் சன்னதிக்கு நடந்து செல்ல வேண்டும். உடல் பூமியில் படும்படி விழுந்து ஆண்டவனை நமஸ்கரிக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

iyyappan special 23


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->