வீட்டில் தெய்வ சக்தியை அதிகரிக்க... இதை மட்டும் செய்யுங்க.! - Seithipunal
Seithipunal


* நமது வீட்டில் தெய்வ சக்தியை அதிகரிக்க காலை, மாலை விளக்கேற்றி வழிபாடு செய்ய வேண்டும். இப்படி தொடர்ந்து செய்வதால் வாழ்க்கையில் உள்ள பிரச்சனைகள் குறைய தொடங்குவதை உணரலாம். 

* அதாவது நமது வீட்டில் தெய்வ சக்தி இருப்பது தெரியவரும். வீட்டு பூஜை அறையில் கண்ணாடி வைத்தால் தெய்வ சக்தி அதிகரிக்கும். கண்ணாடிக்கு தெய்வ சக்தியை அதிகரிக்க கூடிய ஆற்றல் உள்ளது. 

* தண்ணீர் இல்லாமல் எந்த ஒரு பூஜையும் நிறைவு பெறாது. எனவே பூஜை அறையில் பாத்திரத்தில் தண்ணீர் வைத்து வழிபடுவது அவசியம். 

* வீட்டிற்குள் நுழையும் பொழுது நறுமணம் வீசினால் அந்த வீட்டில் தெய்வ சக்தி அதிகரிக்க துவங்கும். பூஜை அறையில் எவ்வளவு விதமான விளக்குகள் வைத்திருந்தாலும் அகல் விளக்குக்கு இணை எதுவும் கிடையாது. 

* எனவே எப்பொழுதும் பூஜையறையில் ஒரு அகல் விளக்காவது ஏற்றி வழிபாடு நடத்த வேண்டும். வீட்டிற்கு முன்பு விநாயகர் சிலை இருப்பது வாஸ்து பிரச்சனைகளை போக்கும். வீட்டிற்குள் எதிர்மறை ஆற்றலை நுழையாமல் தடுக்கும். 

* பூஜை அறையில் கோமாதா படத்தை வைத்து வழிபட்டால் வீட்டில் சுபிட்சம் அதிகரிக்கும். எந்த கோவிலுக்கு சென்றாலும் அங்கிருந்து மண் எடுத்து வந்து வீட்டில் பூஜை செய்தால் தெய்வ சக்தி அதிகரிக்கும். 

* வெள்ளிக்கிழமை நாட்களில் ஒரு கண்ணாடி பாத்திரத்தில் தண்ணீர் எடுத்துக்கொண்டு அதில் ஜவ்வாது, பச்சை கற்பூரம் சேர்த்து அதன் மேல் செந்தாமரை மலரை வைத்து விடவும். பின்னர் கண்ணாடி பாத்திரத்தை வீட்டு பூஜை அறையில் வைக்க வேண்டும். 

* வீடு முழுவதும் தூபம் போட வேண்டும். இந்த கண்ணாடி பாத்திரத்தை வரவேற்பு இடத்திலும் அல்லது நிலை வாசலிலும் வைக்க கூடாது. பூஜை அறையில் வைக்கும் பொழுது ஜவ்வாது, பச்சை கற்பூர வாசத்திற்கு வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றல் நீங்கி தெய்வ சக்தி அதிகரிக்கும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

increase divine power at home


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->