நகைச்சுவையான 6 ராசிக்காரர்கள்.. நீங்களும் இருக்கிறீர்களா.?! - Seithipunal
Seithipunal


நகைச்சுவையான 6 ராசிக்காரர்கள்..!

சிரிப்பு ஒருவருக்கு வருவது இயல்பானது. சிரிக்கத் தெரிந்த ஒருவர் மற்றவர்களையும் சிரிக்க வைப்பார்.

கடினமான சூழ்நிலைகளில் வேடிக்கையான ஒருவருடன் இருப்பது நமது மனநிலையை எளிதாக்கி அதிலிருந்து வெளிவர உதவும். அவர்களின் ஆரோக்கியமும், ஆயுளும் அதிகரிக்கும்.

மூளையில் தோன்றும் மாற்றமே நகைச்சுவை உணர்வையும், சிரிப்பையும் ஏற்படுத்துகிறது.

நகைச்சுவை உணர்வுக்கும், ஜோதிடத்திற்கும் தொடர்பு உள்ளது. ஜாதக அமைப்பில் புதன், சுக்கிரன், சந்திரன் ஆகிய மூன்றும் ஒருவரின் சுப தொடர்புகளான நகைச்சுவையையும், மகிழ்ச்சியையும் கொடுக்கிறது.

சிரிக்க வைக்கும் அற்புத வரம் அனைவருக்கும் கிடைத்துவிடாது. ஜோதிட கணிப்புகளின் படி சில ராசிகளில் பிறந்தவர்களுக்கு மட்டுமே இந்த ஆற்றல் இருக்கும்.

மற்றவர்களை சிரிக்க வைக்கும் எண்ணமும், சக்தியும் கொண்ட ராசிக்காரர்களை பற்றி பார்க்கலாம் வாங்க..

மிதுனம் :

மிதுன ராசிக்காரர்களால் சுற்றுச்சூழலை கொஞ்சம் கலகலப்பாக மாற்ற அதே பழைய வேடிக்கையான வரிகளை பயன்படுத்துவார்கள். இது சில நேரங்களில் வேலை செய்கிறது, ஆனால் எப்போதும் இல்லை. இவர்களின் மனதில் அனைவரையும் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் எப்போதும் இருக்கும்.

சிம்மம் :

சிம்ம ராசிக்காரர்களுக்கு கவனிக்கும் திறமை அதிகம். அவர்கள் எதிர்கொள்ளும் சூழ்நிலையை பொறுத்து தன்னிச்சையாக நகைச்சுவைகளை உருவாக்குகிறார்கள். மற்றவர்களின் மனநிலைக்கு ஏற்ப நகைச்சுவை செய்வதில் இவர்கள் வல்லவர்கள்.

கன்னி :

கன்னி ராசிக்காரர்கள் பண விவகாரம் அல்லது பண விஷயங்களில் கேலி செய்வது அல்லது வேடிக்கையாக ஏதாவது பேசுவது போன்றவற்றில் கில்லாடிகள். இதனால் பெரிய பிரச்சனைகளை கூட அசால்ட்டாக முடிப்பார்கள்.

தனுசு :

தனுசு ராசிக்காரர்கள் மழுங்கிய இயல்புடையவர்கள். சூழ்நிலைகள் அல்லது பங்கு கொள்ளும் விவாதங்கள் எதுவாக இருந்தாலும், அது தொடர்பான தங்கள் கருத்தைப் பேசுவார்கள். இந்த அணுகுமுறை அவர்களை மிகவும் நகைச்சுவையானவர்களாக காட்டுகிறது. ஏனெனில் இவர்கள் பெரும்பாலும் தங்கள் கருத்துக்களை நகைச்சுவைகளாக வெளிப்படுத்துகிறார்கள்.

கும்பம் :

கும்ப ராசிக்காரர்கள் மற்றவர்கள் சொல்வதை நகைச்சுவையாக மாற்றுவதில் வல்லவர். எந்தவொரு புதிய நபருக்கும் முதல் சந்திப்பிலே இவர்களை பிடித்துவிடும்.

மீனம் :

சோகமான நேரத்திலிருந்து தங்களை வெளியே கொண்டு வர மீன ராசிக்காரர்கள் நகைச்சுவை கருவியைப் பயன்படுத்துகிறார்கள். அவர்கள் தங்களுக்கும், அவர்களை சுற்றியுள்ள நபர்களுக்கும் மகிழ்ச்சியான சூழ்நிலையை உருவாக்குவார்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Humour sense zodiacs


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->