நட்சத்திரமும், ராசி மண்டலமும்.. நட்சத்திரத்தில் நீங்கள் அறியாத விஷயம் உள்ளே..! - Seithipunal
Seithipunal


ஜோதிட சாஸ்திரத்தில் மிக மிக முக்கியமானது நட்சத்திரம் ஆகும். கிரகங்களை விட நட்சத்திரங்களுக்கு வலிமை அதிகம். ஒருவருடைய ஜாதகம், அவர் பிறந்த நட்சத்திரத்தின் அடிப்படையில்தான் அமைகிறது.

ஒருவர் எந்த நட்சத்திரத்தில் பிறந்துள்ளாரோ அந்த நட்சத்திரம் எந்த ராசிக்கு உரியதோ அதுவே அவரது ஜென்ம ராசியாகும். ராசிகள் மொத்தம் 12 உள்ளன. மொத்த நட்சத்திரம் 27 ஆகும். இங்கு ஒவ்வொரு நட்சத்திரமும் 4 பாதங்களாக பிரிக்கப்பட்டு 1, 2, 3, 4 பாதங்கள் என்று குறிக்கப்படுகின்றன.

பாதம் என்றால் என்ன?

ஒரு நட்சத்திரத்தின் ஒளிக்கற்றைகளை பிரிப்பதே பாதங்கள். ஒளிக்கற்றைகளை நான்காக பிரிப்பதாகும். அதனால் தான் ஒவ்வொரு நட்சத்திரங்களுக்கும் 4 பாதங்கள் உள்ளன.

நாழிகை தான் நட்சத்திரங்களை பாதங்களாக பிரித்தெடுப்பதில் முக்கியமான ஒன்றாகும். அதாவது ஒரு நட்சத்திரம் என்றால் 60 நாழிகை. அதை நான்கு சம பாகங்களாக பிரித்தால் ஒவ்வொரு நட்சத்திரமும் 15 நாழிகை கொண்டிருக்கும். ஒரு நட்சத்திரத்தின் முதல் 15 நாழிகை முதல் பாதம், அடுத்த 15 நாழிகை இரண்டாம் பாதம். அதுபோல மற்ற பாதங்களை பிரித்துக் கொள்வார்கள்.

ராசி மண்டலம் :

ஒரு ராசி மண்டலம் என்பது 360 பாகைகளை (டிகிரி) கொண்டது. இந்த ராசி மண்டலத்தில் 30 டிகிரியை கொண்டது ஒரு ராசி ஆகும். மண்டலத்தில் உள்ள 27 நட்சத்திரங்கள் சமமாக ஒவ்வொரு ராசிக்கும் பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு பகிரப்பட்ட நட்சத்திரங்கள் பாதங்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பாதத்திற்கும் ஒரு குறிப்பிட்ட டிகிரிகள் வழங்கப்பட்டு 12 ராசிகளில் இடம் பெறுமாறு செய்யப்பட்டுள்ளது.

ஒரு ராசியின் பாகைகள் (டிகிரி) - 30 பாகைகள்

ஒரு நட்சத்திரத்தின் பாகை - 13 பாகைகள் 20 கலைகள்

60 கலைகள் - 1 பாகை


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

horoscope 9


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->