4,500 கிலோ நெய்க் கொள்முதல் முதல் பாதுகாப்பு தளவாடம் வரை...! திருவண்ணாமலை கார்த்திகை தீபம் உற்சாகத் தயாரிப்பில்..!
From purchasing 4500 kg ghee safety equipment Tiruvannamalai Karthigai Deepam full swing
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலின் அற்புத ஆன்மீகச் சிறப்பை ஒளிரவைக்கும் கார்த்திகை தீபத் திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) துர்க்கையம்மன் உற்சவத்துடன் துவங்கி, டிசம்பர் 7 வரை அங்கதமாக நடைபெற உள்ளது.10 நாட்கள் பக்தி பரவசத்தில் நிறையும் இவ்விழாவின் முக்கியமான நிகழ்வான மகா தீபம் டிசம்பர் 3ஆம் தேதி ஏற்றப்படுகிறது.

அன்று காலை பரணி தீபம், மாலை மலை உச்சியில் மகா தீபம், இரவில் பஞ்சமூர்த்திகள் வீதியுலா என அகிலாண்ட கோடிகளின் இறைநம்பிக்கையை தழுவும் சிறப்புகள் தொடர்கின்றன.இந்த ஆண்டு திருவிழாவுக்கு 40 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திரளுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், மாவட்ட நிர்வாகம், கோவில் நிர்வாகம், காவல்துறை ஆகியவை விரிவான பாதுகாப்பு மற்றும் ஒழுங்கு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளன.
மகா தீபத்துக்காக நெய் காணிக்கை தரும் பக்தர்களின் வசதிக்காக, அருணாசலேஸ்வரர் கோவில் இணை ஆணையர் அலுவலகம் அருகில் சிறப்பு கவுண்டர் தொடங்கப்பட்டுள்ளது. மலை உச்சியில் மகா தீபம் ஏற்றுவதற்காக திருவண்ணாமலை ஆவின் நிறுவனத்திலிருந்து 4,500 கிலோ முதல்தர நெய் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
இந்த நெய் ராஜகோபுரம் அருகிலுள்ள திட்டி வாசலில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.திருவண்ணாமலை கார்த்திகை தீபம், இந்த வருடமும் பக்தி, ஒளி, ஆன்மீகத் திருவிழா என மக்களை மயக்கத் தயாராக உள்ளது.
English Summary
From purchasing 4500 kg ghee safety equipment Tiruvannamalai Karthigai Deepam full swing