தடையில்லா வருமானம் பெருக... 12 ராசிக்காரர்களும் செய்ய வேண்டியவை.! - Seithipunal
Seithipunal


வருமானம் பெருக 12 ராசிக்காரர்களுக்கான பலன்கள்:

என்ன தான் உழைத்தாலும் தேவைக்கேற்ற வருமானம் இல்லை என்பது தான் அனைவரின் கவலையாக இருக்கிறது. அவரவர் ராசிக்கேற்ப சின்ன சின்ன எளிய பரிகாரங்களை செய்தாலே போதும் தடையில்லா வருமானத்தை பெறலாம்.

மேஷம் 

மேஷ ராசிக்காரர்கள் செவ்வாய்க்கிழமைகளில் சிவன் கோவிலில் அபிஷேகப் பொருட்களை வாங்கி கொடுத்தால் தடையில்லா வருமானம் பெருகி செல்வ செழிப்பு கூடும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்கள் பசுக்களுக்கு பழம் தந்தால் வருமானத்தில் இருக்கும் தடைகள் நீங்கி, செல்வ செழிப்பு ஏற்படும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்கள் பெருமாள் கோவிலில் பச்சைப்பயறு தானம் செய்யலாம். அத்துடன் இல்லம் தேடி வரும் சுமங்கலிப் பெண்களுக்கு மஞ்சள், குங்குமம் மற்றும் வளையல் கொடுக்கலாம்.

கடகம்

கடக ராசிக்காரர்கள் வீட்டில் பறவைகளுக்கு மண் பாத்திரங்களில் தண்ணீரை வைத்தாலே போதும். அத்துடன் திங்கட்கிழமைகளில் சிவன் கோவில்களில் பசும்பால் அபிஷேகத்திற்கு தரலாம்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்கள் இரவில் படுக்கை அறையில் காப்பர் அல்லது பித்தளை செம்பில் தண்ணீர் வைத்து மறுநாள் காலையில் அந்த தண்ணீரை செடிகளுக்கு ஊற்றினால் நல்ல பலன் பெறலாம்.

கன்னி

கன்னி ராசிக்காரர்கள் புதன்கிழமைகளில் கோவிலில் இருக்கும் பசுக்களுக்கு வெல்லம் கலந்த கோதுமை மாவு கொடுத்தால் செல்வ செழிப்பு பெருகும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்கள் சிவபெருமானுக்கு இளநீர், பசும்பால், பன்னீர் போன்ற அபிஷேக பொருட்களை தானம் அளிக்கலாம்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்கள் முருகன் கோவிலில் சஷ்டி நாட்களில் அபிஷேகப் பொருட்கள் வழங்கலாம். அத்துடன் கடலை பருப்பு நைவேத்தியம் செய்து வழிபட்டாலும் பணம் பெருகும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்கள் வெள்ளிக்கிழமைகளில் வீட்டில் ஐந்து முக குத்து விளக்கில் தாமரை தண்டு திரியிட்டு நெய் தீபம் ஏற்றினால் வருமானத்தில் இருக்கும் தடைகள் எல்லாம் நீங்கி செல்வ செழிப்பும் ஏற்படும்.

மகரம்

மகர ராசிக்காரர்கள் வீட்டில் துளசி செடியை வளர்க்கலாம். சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு துளசி மாலை சாற்றி நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வர வருமானத்தில் இருக்கும் தடைகள் விலகும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்கள் சனிக்கிழமைகளில் நவகிரக சன்னதியில் எள் தீபம் ஏற்றி வழிபாடு செய்தால் வருமான தடைகள் நீங்கி செல்வ செழிப்பு ஏற்படும்.

மீனம்

மீன ராசிக்காரர்கள் வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்தால் உங்கள் வீட்டிற்கு யோகம் தேடி வரும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

endless income for 12 rasikal


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->