இதையெல்லாம் யாருக்காவது பரிசாக கொடுத்தால் அவ்வளவு தான்.. உஷார்.! இழப்புகள் ஏற்படலாம்.!  - Seithipunal
Seithipunal


நல்ல நாள், பெருநாள் என்றால் நமது உறவினர்களுக்கும் வேண்டிய நண்பர்களுக்கும் ஏதாவது பரிசாகவோ அல்லது பணமாகவோ கொடுப்பதை நம் தமிழ் பாரம்பரியத்தில் வழக்கமாக வைத்திருக்கிறோம். இப்படி பரிசு பொருட்களை பரிமாறிக் கொள்ளும் பொழுது உறவு இன்னும் அதிகமாக பலப்படும் என்பது நம்பிக்கை. 

இப்படி பரிசு பொருட்கள் கொடுக்கும் போது நீங்கள் சில பரிசு பொருட்களை கொடுத்தால் உங்கள் வீட்டில் இருக்கும் மகாலட்சுமியின் அருள் நீங்கிவிடும் என்று சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன. அப்படிப்பட்ட சில முக்கிய பொருட்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம். 

மகாலட்சுமி சிலை மற்றும் விநாயகர் சிலை உள்ளிட்டவற்றை பரிசளிப்பதை கட்டாயம் தவிர்க்க வேண்டும். தன வரவை கொடுக்கக்கூடிய கடவுளாக இது இருப்பதால் இந்த பொருட்களை பரிசளித்தால் உங்களது பணவரவு தடைபடும் என்று கூறப்படுகிறது. 

லக்ஷ்மி மற்றும் விநாயகர் இரண்டும் ஒரு சேர இருக்கும் புகைப்படமோ அல்லது பரிசு பொருளையோ மற்றவருக்கு கொடுக்கக் கூடாது. இருவரும் ஒன்றாக இணைந்த இடத்தில் ஐஸ்வர்யம் நிறைந்து காணப்படும். எனவே, இந்த பொருட்களை மற்றவரிடம் கொடுத்தால் உங்களுக்கு இருக்கும் அதிர்ஷ்டத்தை இழக்க நேரிடும். 

வெள்ளி, செம்பு, தங்கம் உள்ளிட்ட உலகங்களால் ஆன பரிசுப் பொருட்களை பலரும் கொடுப்பதுண்டு. ஆனால், வெண்கலம், தாமிரம், தங்கம், வெள்ளி, பித்தளை உள்ளிட்ட உலகங்களை கொண்ட பொருட்களை உங்களிடம் இருந்து யாருக்கும் பரிசாக கொடுக்கக் கூடாது. 

இது அனைத்தும் ஆன்மீக சக்தி நிறைந்த பொருட்களாக காணப்படுகிறது. எனவே உங்களிடம் இருக்கும் பொருட்களை நீங்கள் பரிசாகவோ தானமாகவோ கொடுத்தால் ஐஸ்வரியத்தை இழக்க நேரிடும். 

இரும்பு சம்பந்தப்பட்ட பொருட்களையும் மற்றவர்களுக்கு பரிசாக கொடுக்கக் கூடாது. உலகங்களை தவிர்க்க வேண்டும் என்று சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன. அலுமினிய பொருட்கள் மங்களகரமானது என்று கூறப்படுகிறது. எனவே, அலுமினியத்தால் ஆன பொருட்களை ஒருவருக்கு கொடுத்தால் உங்கள் உறவு நீண்ட காலம் நீடிக்கும் என்று கூறப்படுகிறது. 

அத்துடன் வேறொருவருக்கு வாங்கிய பரிசை இன்னொருவருக்கு கொடுக்கவும் கூடாது. அப்படி எல்லாம் கொடுத்தால் துரதிஷ்டம் ஏற்படும். நமக்கு பயன்படவில்லை என்று நமக்கு ஒருவர் கொடுத்த பரிசை இன்னொருவருக்கு சிலர் கொடுப்பதுண்டு இதை செய்தால் வீட்டில் தரித்திரியம் ஏற்படும். 

புதுப்புது ஆடை அணிகலன்களை சிலர் பரிசளிக்கக்கூடும். ஆடைகளை பரிசாக கொடுப்பது நம்மிடம் இருக்கும் சனி தோஷத்தை நீக்கும். ஆனால் கருப்பு நிற உடை போன்றவற்றை பரிசாக நிச்சயம் கொடுக்கக் கூடாது. 

தாய் வீட்டில் இருந்து எண்ணெய் உப்பு உள்ளிட்ட பொருட்களை மகள் எடுத்துக்கொண்டு வரக்கூடாது. இதற்கு பதில் ஏதாவது பணம் வாங்கிக்கொண்டு வந்துவிடலாம். இப்படி வாங்கிக் கொண்டு வருவது இரண்டு வீட்டிற்கும் பகையை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

do not gift these items as gift


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->