தீபாவளி.. லட்சுமி குபேர பூஜை.. அன்றைய நாளில் என்ன செய்ய வேண்டும்? - Seithipunal
Seithipunal


தீபாவளியின் சிறப்புகள்:

தீபம் என்றால் ஒளி-விளக்கு. ஆவளி என்றால் வரிசை. வரிசையாக விளக்கேற்றி, இருள் நீக்கி, ஒளிதரும் பண்டிகையே தீபாவளி. தீபத்தில் பரமாத்மாவும், நெருப்பில் ஜீவாத்மாவும் வாசம் செய்கின்றனர். அனைத்து ஆலயங்களிலும் தீபாவளி அன்று விஷேச பூஜைகள் இடம் பெறுகின்றன.

தீபாவளி அன்று நாம் செய்ய வேண்டியவை :

தீபாவளி தினத்தன்று தீபம் ஏற்றி பூஜை செய்ய வேண்டும். வாழ்க்கையில் எல்லாக் கஷ்டங்களும் நீங்கி எல்லாவிதமான சந்தோஷங்களும், சௌக்கியங்களும் ஏற்படும்.

தலை தீபாவளி கொண்டாடும் பெண்கள் நெய்தீபம் ஏற்றி மகாலட்சுமியை வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

தீபாவளி நாளில் கேதார கௌரி விரதம் இருந்து வழிபட்டால் மனை தோஷங்கள் நீங்கும். வீட்டில் பொன், பொருள் சேரும். வீடு, நிலம் வாங்கும் யோகம் கிடைக்கும்.

தீபாவளி நல்ல நேரம்..!!

எண்ணெய் தேய்த்து குளிக்க உகந்த நேரம்

அதிகாலை : 04.30 மணி முதல் 06.00 மணி வரை

புதிய ஆடை, அணிகலன்கள் அணிய உகந்த நேரம்

காலை : 06.00 மணி முதல் 07.30 மணி வரை

காலை : 10.30 மணி முதல் 12.00 மணி வரை

லட்சுமி குபேர பூஜை செய்ய உகந்த நேரம்

அதிகாலை : 03.00 மணி முதல் 06.00 மணி வரை

காலை : 10.30 மணி முதல் 12.00 மணி வரை

பிற்பகல் : 12.00 மணி முதல் 01.00 மணி வரை

மாலை : 05.00 மணி முதல் 07.30 மணி வரை

இரவு : 9.00 மணி முதல் 10.00 மணி வரை

தீபாவளியன்று காலையிலும், மாலையிலும் பூஜையறையில் அவசியம் விளக்கேற்றி வழிபாடு செய்தல் வேண்டும். மாலையில் திருக்கார்த்திகையில் செய்வதுபோல் வீடு முழுவதும் அகல் விளக்குகளை ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும்.

தீபாவளி அன்று லட்சுமி குபேர பூஜை செய்வதால் நம் இல்லத்தில் சகல ஐஸ்வர்யங்களும் பெருகும் என்பது ஐதீகம்.

வீட்டில் செய்த பண்டங்களை கிருஷ்ணருக்கு நிவேதனமாகப் படைக்க வேண்டும்.

புத்தாடைகளுக்கு மஞ்சள், குங்கும் இட்டு அணிந்துகொள்ள வேண்டும். பெற்றோரிடம், வீட்டுப் பெரியோர்களிடம் ஆசீர்வாதம் பெறுதல் சிறந்தது.

தீபாவளியன்று எண்ணெய் தேய்த்துக் குளித்தால் பீடைகள் விலகும். புண்ணியம் உண்டாகும்.

தீபாவளியன்று எண்ணெய் தேய்த்துக் குளித்ததும், புதிய ஆடைகளையும், புதிய பலகாரங்களையும் வைத்து வணங்குவது வழக்கம். இது முன்னோர்களுக்கு (பிதுர்களுக்கு) படைக்கும் படையல் ஆகும். அன்று பிதுர்கள் வருவதாக ஐதீகம்.

பட்டாசு, புத்தாடை, இனிப்பு கார வகைகள் என்று அன்றைய நாள் முழுக்க மகிழ்ச்சியும், குதூகலமும் இல்லங்களிலும், நம் உள்ளங்களிலும் வழிந்தோடும்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

diwali 2020 sepcial 2


கருத்துக் கணிப்பு

சசிகலா வருகை அதிமுக-வை பாதிக்குமா?!Advertisement

கருத்துக் கணிப்பு

சசிகலா வருகை அதிமுக-வை பாதிக்குமா?!
Seithipunal