மிதுன ராசிக்காரர்களுக்கு எவ்வளவு பணம் கொடுத்தாலும் சேமிக்க முடியாது..!
Common characteristics of Gemini people
12 ராசிகளில் மூன்றாவதாக வருவது மிதுன ராசி.புதன் பகவானை அதிபதியாக கொண்டது மிதுன ராசி. இந்த ராசியை சேர்ந்தவர்கள் எந்த விஷயத்தையும் அதிகமாக சிந்திப்பார்கள். இரட்டையர்களைச் சின்னமாகக் கொண்ட மிதுன ராசியில் பிறந்த நீங்கள், எந்தவொரு விஷயத்தைச் செய்தாலும் உடனிருப்பவர்கள் என்ன சொல்வார்கள் என்பதை அறிவதற்காகக் காத்திருப்பீர்கள்.
இவர்கள் எந்த ஒரு பிரச்னையாக இருந்தாலும், சமன் செய்து சீர் தூக்கும் கோல் போல துல்லியமாக நீதி வழங்குவதில் வல்லவர்களாக இருப்பார்கள்.
யாரிடமும் உதவி கேட்கத் தயங்க கூடியவர்கள். அலுவலக வேலைகளை இழுத்துப் போட்டுக்கொண்டு ஆர்வத்துடன் செய்ய கூடியவர்கள். பாராட்டு கிடைத்தாலும் மற்றவர்களை அனுசரித்துப் போகத் தெரியாது என்பதால், பதவி, சலுகைகள் பெறுவதில் சிற்சில தடைகள் ஏற்படும்.

இவர்களுக்கு வாக்கு ஸ்தானாதிபதி சந்திரன் என்பதால், வானத்தில் நிகழும் மாயாஜாலங்களைப் போல், உங்கள் மனதிலும் மாற்றங்கள் நிகழ்ந்தபடி இருக்கும். இந்த ஸ்தானம் செலவுகளையும் சேமிப்புகளையும் குறிக்கும் என்பதால், உங்களிடம் எவ்வளவு பணம் கொடுத்தாலும் சேமிக்க முடியாத நிலை உருவாகும்.
மூத்த சகோதர, சகோதரிகளிடம் உங்களுக்குப் பாசம் இருக்கும். அதிலும் இளைய சகோதர ஸ்தானம் என்னும் 3-ஆம் இடத்துக்கு சூரியன் அதிபதியாக வருவதால், இளைய சகோதர சகோதரிகளிடம் அதிக அன்பு காட்டுவீர்கள் நீங்கள். உங்களுடைய மூத்த சகோதர சகோதரிகள் எடுக்கும் முடிவுகள் உங்களை எதிர்மறையாக பாதிக்கக்கூடும்.

உங்களின் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் அதாவது 05-ஆம் இடத்துக்கு அதிபதியாக சுக்கிரன் இருப்பதால், எப்போதும் இறையருள் உங்களுக்கு இருக்கும்.
உங்களின் உத்தியோக ஸ்தானத்துக்கு அதிபதியாக குரு வருவதால், ஒரே இடத்தில் பணி புரிய முடியாது. உங்களின் பயணம் தொடர்ந்து கொண்டே இருக்கும். அத்துடன், உங்களில் சிலர் சுயதொழில் தொடங்கவும் வாய்ப்பு உண்டு. நீங்கள் தொழிலின் நிமித்தம் குடும்பத்தைப் பிரிந்து சென்று வேறோர் இடத்தில் பணம் சம்பாதிக்க நேரிடும். ராசியாதிபதி புதனாக இவர்களுக்கு வருவதால், பெரும்பாலும் பெருமாள் கோயில்கள் உங்களுக்கு ஏற்றவையாக அமையும்.
English Summary
Common characteristics of Gemini people