திருப்பதி ஏழுமலையான் கோயில் 8 மணி நேரம் மூடல் - காரணம் என்ன? - Seithipunal
Seithipunal


திருப்பதி ஏழுமலையான் கோயில் 8 மணி நேரம் மூடல் - காரணம் என்ன?

ஒவ்வொரு சந்திரகிரகணத்தின் போதும் கோயில்களில் நடை சாற்றுவது வழக்கம் அந்த வகையில், இந்த மாதம் வருகிற 29-ம்தேதி சந்திர கிரகணம் என்பதால், திருப்பதி ஏழுமலையான் கோயில் சந்திர கிரகணத்தையொட்டி சுமார் 8 மணி நேரம் மூடப்பட உள்ளது. அதாவது, முந்தைய நாளான 28-ம் தேதி இரவு 7.05 மணி முதல் 29-ம் தேதிஅதிகாலை 3.15 மணி வரை கோயில் நடை அடைக்கப்பட உள்ளது. 

அதன் பின்னர் கோயில் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு, 5.15 மணிக்கு பிறகு சுவாமி தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். இதனால் ஏழுமலையான் கோயில் நடை சுமார் 8 மணி நேரம் வரை சாத்தப்படுகிறது. இதன் காரணமாக 28-ம் தேதி சகஸ்ர தீப அலங்கார சேவை மற்றும் மூத்த குடிமகன்களுக்கான சிறப்பு தரிசனம் உள்ளிட்டவை ரத்து செய்யப்பட்டுள்ளது. 

இதைக் கவனத்தில் கொண்டு பக்தர்கள் தங்களது திருமலை யாத்திரையை திட்டமிட வேண்டும் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் வேண்டுகோள் விடுத்துள்ளது. தொடர் விடுமுறை மற்றும் புரட்டாசி சனிக்கிழமை என்பதால், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

நேற்று முன்தினம் புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமை என்பதால் பக்தர்கள் 5 கி.மீ தூரம் வரை நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமியை தரிசனம் செய்த நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை 30 மணி நேரம் வரை பக்தர்கள் காத்திருந்து சுவாமியை தரிசனம் செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

coming 29th eight hours tirupathi temple gate close for lunar


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->