பணக்கஷ்டம்.. மனக்கஷ்டம் நீங்க.. நாளை ஆடி தேய்பிறை அஷ்டமியில் பைரவரை வழிபடுங்கள்.! - Seithipunal
Seithipunal


மற்ற எல்லா தமிழ் மாதங்களை காட்டிலும் ஆன்மிக சிறப்பு வாய்ந்த தினங்கள் அதிகம் கொண்ட ஒரு மாதமாக ஆடி மாதம் இருக்கிறது. இந்த ஆடி மாதம் என்பது சூரிய பகவான் மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்குள் பிரவேசிக்கும் காலமாக இருக்கிறது. கடக ராசி சந்திர பகவானுக்குரிய ராசியாகும். அதில் சந்திரனுக்கு நட்பு கிரகமான சூரியன் பிரவேசிப்பது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இத்தகைய ஆன்மிக சிறப்பு கொண்ட மாதத்தில் வருகின்ற ஆடி தேய்பிறை அஷ்டமி தினத்தில் நாம் மேற்கொள்ள வேண்டிய பைரவர் வழிபாடு முறையையும், அதனால் நமக்கு ஏற்படும் நன்மைகள் என்ன? என்பதையும் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

வருடம் முழுவதும் ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறை காலங்களில் அஷ்டமி தினங்கள் வருகின்றன. இதில் தேய்பிறை அஷ்டமி தினம் சிவபெருமானின் ஒரு வடிவமாக தோன்றியவர் ஆன ஸ்ரீபைரவரின் வழிபாட்டுக்குரிய ஒரு சிறந்த தினமாக இருக்கிறது. அதிலும் ஒவ்வொரு தினமும் இறைவழிபாட்டிற்குரிய தினமாக இருக்கும் ஆடி மாதத்தில் வியாழக்கிழமையில் தேய்பிறை அஷ்டமி வருவது மிகவும் விஷேசமாகும்.

இந்த தேய்பிறை அஷ்டமி நாளில் பைரவருக்கு நடைபெறும் சிறப்பு பூஜைகளில் கலந்து கொண்டால் எல்லாவித கஷ்டங்களும் நீங்கி சகல சௌபாக்கியங்களையும் பெறுவார்கள் என்பது நம்பிக்கை.

அஷ்டமி அன்று ராகு கால நேரமான 1.30 மணியிலிருந்து 3.00 மணிக்குள்ளாக பைரவர் கோயில் அல்லது சிவன் கோயிலில் இருக்கின்ற சன்னதிக்கு சென்று பைரவருக்கு சிவப்பு நிற மலர்களை சமர்ப்பித்து, செவ்வாழை நெய்வேத்தியம் செய்து, தேங்காயில் நெய் அல்லது நல்லெண்ணெய் தீபம் ஏற்றி பைரவருக்குரிய மந்திரங்கள் துதித்து பைரவரை வணங்க வேண்டும். மேலும் இச்சமயத்தில் பைரவர் காயத்ரி மந்திரத்தை 108 அல்லது 1008 எண்ணிக்கையில் துதிப்பது நல்லது.

மேற்கண்ட முறையில் ஆடி மாத தேய்பிறை அஷ்டமியன்று பைரவரை வழிபடுபவர்களுக்கு சிறிது காலத்திலேயே எப்படிப்பட்ட பணக்கஷ்டங்களும் நீங்கும். தொழில், வியாபாரங்களில் நேரடி மற்றும் மறைமுக எதிரிகளால் தொல்லைகள் ஏற்படாமல் காக்கும்.

வருமானம் பெருகும். பெண்களுக்கு ஏற்படும் உடல் மற்றும் மன ரீதியான பிரச்சனைகள் அனைத்தும் தீரும். துஷ்ட சக்திகளினால் பாதிக்கப்பட்டவர்கள் அதிலிருந்து விடுபடுவார்கள். கொடிய நோய்கள் அனைத்தும் சிறிது சிறிதாக குணமாகும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

adi month theypirai ashtami bairavar vazhipadu


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->