அள்ளிக் கொடுக்கும் ஆடி வெள்ளி நாளில்.. செல்வ வளம் தரும் அம்மனை வழிபட தவறாதீர்கள்..!! - Seithipunal
Seithipunal


ஆடி வெள்ளியின் சிறப்புகள்:

தெய்வீக மணம் கமழும் மாதமாக ஆடி மாதம் திகழ்கிறது. ஆடி மாதத்தை 'சக்தி மாதம்" என்று ஜோதிட நூல்கள் குறிப்பிடுகின்றன. ஆடி வெள்ளி, செவ்வாய், ஞாயிற்றுக்கிழமைகள் மிகவும் சிறப்பு மிக்கவை. அம்மன், அம்பாள், சக்தி ஸ்தலங்களில் மிகவும் சிறப்பு வாய்ந்த பூஜைகள், ஹோமங்கள், உற்சவங்கள், பால் அபிஷேகம் போன்றவை விமர்சையாக நடக்கும்.

கோவில்களில் மட்டுமின்றி வீடுகள்தோறும் விரதம் இருந்து வேப்பிலை தோரணம் கட்டி அம்மனை வழிபட்டு நேர்த்திக்கடன்களை நிறைவேற்றி கூழ் ஊற்றுவார்கள். நாளை ஆடி வெள்ளி. எனவே ஆடி மாத வெள்ளிக்கிழமையின் சிறப்பினை பற்றி பார்க்கலாம் வாங்க.

கிழமைகளில் சுக்ரவாரம் என்றழைக்கப்படுவது வெள்ளிக்கிழமையாகும். அள்ளிக் கொடுக்கும் சுக்கிரனுக்குரிய வெள்ளிக்கிழமையன்று, துள்ளித்திரியும் சிங்கத்தின் மேலே ஏறி பவனி வரும் தூயவளாம் அம்பிகையை வழிபட்டால், நல்ல காரியங்கள் இல்லத்தில் நடைபெறும்.

எந்த விதத்திலும் பக்திக்கு இடையூறு இருக்கக்கூடாது என்றே ஆடி மாதத்தில் திருமணம் உள்ளிட்ட இதர குடும்ப விசேஷங்கள் இடம் பெறுவதில்லை. ஆடி வெள்ளியான நாளை மட்டுமின்றி இந்த மாதத்தில் வரும் அனைத்து வெள்ளிக்கிழமைகளுக்கும் சிறப்பு சேர்க்கும் விதத்தில் காலை, மாலை என பெண்கள் வீடுகளிலும் கோவில்களிலும் அம்மனை வழிபாடு செய்வது வழக்கம். மகாலட்சுமியை வழிபட்டால் செல்வவளம் பெருகும்.

ஆடி வெள்ளி வழிபாடு செய்வது சகல பாக்கியங்களையும் அள்ளித்தரும். திருமண பாக்கியம் கைகூடி வரும். புதுமண தம்பதியருக்கும், நீண்ட காலமாக குழந்தை பாக்கியம் எதிர்பார்த்திருப்போருக்கும் நல்ல அறிவாற்றல், புத்தி சாதுர்யத்துடன் கூடிய குழந்தை பாக்கியம் உண்டாகும்.

ஆடி வெள்ளிக்கிழமை மாலை நேரத்தில் அம்பிகையை, ஆதிபராசக்தியை, அகிலாண்டேஸ்வரியை அலங்கரித்துப் பார்த்து வழிபாடு செய்தால், வளங்கள் அனைத்தும் வந்து சேரும். ஆலயங்களில் குத்து விளக்குப் பூஜை நடைபெறும். 108, 1008 விளக்குகள் வைத்துப் பூஜை செய்வதால் நன்மை தேடி வரும்.

சுமங்கலி பெண்கள் கணவனின் ஆயுள் அதிகரிக்கவும், திருமணமாகாத பெண்கள் விரைவில் திருமணம் கூடி வரவும் விரதம் மேற்கொள்கின்றனர். ஆடி மாதத்தில் வெள்ளியன்று புற்று அம்மனான நாகதேவதையை வழிபடுவது சிறப்பானது.

அன்று வாசலில் கோலமிட்டு, பூஜையறையில் குத்து விளக்கேற்றி, நிவேதனமாக பால்பாயசம் அல்லது சர்க்கரைப் பொங்கல் வைத்து லலிதா சகஸ்ரநாமம், அம்மன் பாடல்களை பாடி பூஜை செய்தால் நல்ல பலன்கள் கிடைக்கும்.

வயதுக்கு வராத பெண் குழந்தைக்கு ரவிக்கை, தாம்பூலம், சீப்பு, சிமிழ், கண்ணாடி வளையல் தந்து சிறப்பிக்க வேண்டும். அவர்களை அம்மனாகப் பாவித்து அமுதளிக்க வேண்டும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Aadivelli special part 3 2022


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->