பல்லிகளை வணங்கும் தமிழகத்தின் பிரபலமான கோவில்; அங்கு ஏன் பல்லிகளை வணங்குகிறார்கள்..? - Seithipunal
Seithipunal


பல ஆச்சரியங்களையம், அற்புதங்களையும் கொண்ட மதம் தான் நமது இந்து மதம். இயற்கையை இறைவனாக வழிபடும் நாம் பல்லிகளை கூட ஒரு கோவிலுக்கு சென்றால் வழிபட வேண்டும். அப்படி ஒரு அதிசய கோவில் நம்ம தமிழ்நாட்டில் இருக்கு. அது எந்த கோவில்..? ஏன் பல்லிகளை வழிப்படணும்? என்று  இந்த பதிவில் நாங்கள் பார்க்கலாம்.

ஒரு சமயம் பிரம்ம தேவர் சரஸ்வதியின் துணையில்லாமல் யாகம் ஒன்றை நடத்தினார். அதை எப்படியாவது தடுக்க நினைத்த  சரஸ்வதி தேவி, வேகவதி என்னும் நதியாகப் பெருக்கெடுத்து ஓட ஆரம்பிச்சி இருக்காங்க. இதை திருமால் அறிந்து கொண்டு, அதை எப்படியாவது தடுக்க வேண்டும் என்று நினைத்து அதைத் தடுத்ததோடு, பிரம்ம தேவர் யாகம் நடத்தவும் உதவி செய்து இருக்கிறார்.

அந்த யாகத்தில் முடிவில் அவர் யாகத்தை ஏற்றுக்கொண்ட திருமால், கேட்ட வரத்தைத் தந்தும் அருள் புரிந்து இருக்கிறார். வரம் தந்த பெருமாளுக்கு இதனாலேயே, ‘வரதராஜன்’ என்ற பெயர் ஏற்பட்டது. அதாவது 40 ஆண்டபினுக்குள் தண்ணீருக்குள் இருந்து ஒரு முறை வெளியில் வரும் சிறப்பு மிக்க அத்திவரதர் ஆலயம். 

காஞ்புரத்தில் இருக்கும் வரதராஜ பெருமாள் கோவில் இந்த சிறப்பு வாய்ந்த கோவில். இங்கு புண்ணியக்கோடி விமானத்தின் கீழ் மேற்கு திசை நோக்கி வீற்றிருந்து அருள்பாலிக்கிறார் வரதராஜப் பெருமாள். பெருந்தேவி தாயார் தனிச் சன்னிதி கொண்டு அருள்பாலிக்கிறார். வரதராஜப் பெருமாள் கோயிலில் உள்ள உத்தரத்தில் இரண்டு பல்லி சிற்பங்கள் உள்ளன. ஒன்றுக்கு தங்கக் கவசமும் மற்றொன்றுக்கு வெள்ளிக் கவசமும் அணிவிக்கப்பட்டு உள்ளது. இந்த பல்லி சிற்பங்களை தரிசித்தால் செய்த பாவங்கள் விலகும் என்பது ஐதீகம்.

இந்த வரதராஜப் பெருமாள் கோயில் சன்னிதியில் விளங்கும் இந்த பல்லி சிற்பங்களுக்கு ஒரு புராணக் கதையும் உள்ளது. ஸ்ருங்கிபேரர் என்ற முனிவரின் இரண்டு மகன்கள் ஹேமன், சுக்லன். இவர்கள் கௌதம முனிவருக்கு அவருடைய ஆசிரமத்தில் தங்கி பணிவிடைகள் செய்து வந்தனர்.

ஒரு நாள் கௌதம முனிவரின் சீடர்களான இவர்கள் இருவரும் ஒரு சமயம் குரு செய்யும் பூஜைக்கு தேவையான தீர்த்தத்தை மூடாமல் வைத்து விட்டனர். அபிஷேக நேரத்தின் போது அதை குருவிடம் கொடுக்க, அதனுள் விழுந்து கிடந்த பல்லி குதித்து ஓடியது. இதனால் கோபமடைந்த கௌதம முனிவர் அந்த சீடர்களை பல்லிகளாக மாறும்படி சபித்து விட்டாராம். அதற்காக அவர்கள் சாப விமோசனம் கேட்டபோது, ‘மகாவிஷ்ணுவை தரிசித்தால் பாவம் தீரும்’ எனக் கூற, காஞ்சிபுரம் வந்து பல்லிகளாக உத்தரத்தில் தங்கி தவமிருந்தனர். அவர்களின் பக்தியை மெச்சிய பெருமாள் அவர்களுக்கு சாப விமோசனம் அளித்தார் என்பது இந்த வரதராஜ பெருமாள் கோவிலின் தல வரலாறு.

இந்த கோவிலுக்கு வருபவர்கள் இந்த பல்லிகளின் சிற்பத்தை தரிசித்தால் நாம் அறியாமல் செய்த பாவத்திற்கு நிவர்த்தி கிடைக்கும் என்பதுடன், சகல தோஷங்களும் நீங்க பெறுவார்கள் என்பது ஐதீகமாக இருக்கிறது. இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் இக்கோயிலில் 24 படிகள் ஏறி வரதராஜ பெருமாளையும், இவ்விரு பல்லிகளையும் தரிசிக்க வேண்டும். இக்கோயில் காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

அத்திவரதர் 

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள், பிரம்மா நடத்திய அசுவமேத யாகத்தில் இருந்து அவதரித்தார் என நம்பப்படுகிறது. பெரும்தேவி தாயார் பிருகு மஹரிஷி நடத்திய புத்திர காமஷ்டி யாகத்தில் அவதரித்தாக வரலாறு. இந்த பெருமாளிடம் நேரடியாக பேசும் பேறு பெற்றவராக, திருக்கச்சி நம்பிகள் திகழ்ந்தார்.

தினமும் காலை கிணற்றில் இருந்து பெருமாளுக்கு தீர்த்தம் கொண்டு வந்து, சேவை செய்து வந்த உடையவர் ராமானுஜர், பெருமாள் உத்தரவின்படி ஸ்ரீரங்கம் சென்றதாக கூறப்படுகிறது. இக்கோவிலில் இரு ராஜகோபுரங்கள் உள்ளன. மன்னர்கள் காலத்தில் கிழக்கு ராஜ கோபுரம் தான் பிரதான நுழைவு வாயிலாக இருந்துள்ளது. இந்த கோவிலில் அனந்தசரஸ், பொற்றாமரை என, இரு திருக்குளங்கள் உள்ளன. 

இக்கோவிலில் தற்போது மூலவராக அருள்பாலித்து வரும் வரதராஜப்பெருமாள், தேவராஜ சுவாமி என்றும் அழைக்கப்படுகிறார். இப்பெருமாள் பிரதிஷ்டை செய்த பின், அத்தி மரத்தால் ஆன, ஆதி அத்தி வரதர் திரு உருவச்சிலை, கோவில் வளாகத்தில் உள்ள, அனந்தசரஸ் திருக்குளத்தில் அமைந்துள்ள, நான்கு கால் மண்டபத்தில், ஜல சயன கோலத்தில் எழுந்தருளியுள்ளார்.

40 ஆண்டுக்களுக்கு பின் அத்திவரதர் 2019 ஜூன் 28-ஆம் தேதி அனந்தசரஸ் குளத்திலிருந்து வெளியில் எடுக்கப்பட்ட அவருக்கு  அபிஷேகம் மற்றும் தைலக்காப்பு சாத்தப்பட்டது. அத்தி வரதர் மீண்டும் 2059-ஆம் ஆண்டு தான் காட்சி தருவார். இந்த கோவில் பற்றிய இன்னும் நிறைய புராண கதைகளும் உண்டு அடுத்து வருகின்ற பதிவுகளில் அதனையும் காணலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

A famous temple in Tamil Nadu that worships lizards


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->