சுக்கிரனின் அருளோடு.. வீட்டில் அதிர்ஷ்டத்தை அள்ளித்தரும் குதிரைகள்.! - Seithipunal
Seithipunal


அதிர்ஷ்டத்தை தரும் ஏழு குதிரை:

7 குதிரைகள் பொருத்தப்பட்ட வாகனத்தில் சூரிய பகவானும் - வெள்ளை குதிரையில் சுக்கிர பகவானும் அருள்புரிகின்றார்கள். குதிரையில் மகாலட்சுமி வாசம் செய்வதால் வாழ்வில் செல்வம் பெருக வெள்ளை குதிரை மிகவும் விசேஷமானது. 


7 குதிரைகள் பொருத்தப்பட்ட ரதங்களில் வலம் வரும் சூரிய பகவான் நமக்கு அனைத்து வளங்களையும் கொடுக்கக்கூடியவர் ஆவார்.

இல்லற வாழ்வில் இனிமை காண சுக்கிர பகவானின் அருள் நிச்சயம் வேண்டும். 

கணவன்-மனைவி ஒற்றுமை மேம்படவும்..

பெண்களுக்கு மனதிற்கு பிடித்த வரன் அமையவும்..

ஆண்களுக்கு நல்ல குணமுடைய மனைவி அமையவும்..

சுக்கிரனை வழிபட்டால் நல்ல பலன் கைகூடும். இதுபோன்று அவருடைய வாகனமாக குதிரைகள் உருவம் இருக்கும் படத்தை வீட்டில் மாட்டி வைப்பது இன்னும் சிறந்த பலன்களை தரும்.

எந்த திசையில், எப்படி வைக்கலாம்?

ஒரு குறிப்பிட்ட திசையில் வைக்கப்படும்போது, ஏழு குதிரைகளின் படம் ஏற்படுத்தும் விளைவை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.

ஓவியத்தை வைக்க ஒருவர் கிழக்கு அல்லது வடக்கு திசையை தேர்வு செய்யலாம்.

வடக்கு செல்வம் மற்றும் தொழில் திசை. எனவே, வடக்கு திசை பார்த்தவாறு 7 குதிரை ஓவியத்தை மாட்டினால் குடும்பத்தில் செழிப்பை அதிகரிக்கும்.

வளர்ச்சிக்கான திசை கிழக்கு. எனவே, இந்த ஓவியத்தை கிழக்கு திசை பார்த்தவாறு வைப்பது தொழில் வளர்ச்சியை ஏற்படுத்தும்.

இந்த படத்தை பொறுத்தவரை திசையை காட்டிலும் நாம் எப்படி வைக்கிறோம் என்பதில் தான் சூட்சமம் உள்ளது. ஏழு குதிரைகளின் படத்தை வீட்டிற்குள் வருவது போல தான் வைக்க வேண்டும்.

முக்கியமாக எல்லோருடைய பார்வைக்கும் தெரியும் படியாக ஏழு குதிரையின் படத்தை சுவரில் மாட்டி வைத்தால் அதிர்ஷ்டத்தை தந்து அந்த வீட்டில் செல்வத்தை பெருக செய்யும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

7 horse Benefits


கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!


செய்திகள்



Seithipunal
--> -->