27 நட்சத்திரங்களும்.. அதற்குறிய வழிபாட்டுத்தலங்களும்..! - Seithipunal
Seithipunal


27 நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் அந்த நட்சத்திரங்களுக்கு உரிய கோவில் தரிசித்தால் அவர்களுக்கு வாழ்வில் பல நன்மை கிடைக்கும். அவை என்னென்ன கோவில்கள் என பார்போம்.

அஸ்வினி பிறவி மருந்தீஸ்வரர் திருக்கோவில். இந்த ஆலயம் திருவாரூரில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருத்துறைப்பூண்டியில் இருந்து 1கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

பரணி அக்னீஸ்வரர் திருக்கோவில். மயிலாடுதுறையில் இருந்து நெடுங்காடு வழியாக காரைக்கால் செல்லும் வழியில் 15 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது.

கார்த்திகை : காத்ர சுந்தரேஸ்வரர் திருக் கோவில். மயிலாடுதுறையில் இருந்து பூம்புகார் செல்லும் வழியில் 8 கிலோமீட்டர் தூரத்தில் கஞ்சா நகரம் உள்ளது. இதன் மெயின் ரோட்டில் இருந்து பிரியும் சாலையில் அரை கிலோமீட்டர் சென்றால் ஆலயத்தை அடையலாம்.

ரோகிணி :  பாண்டவதூதப் பெருமாள் திருக்கோவில். இந்த ஆலயம் காஞ்சீபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோவில் எதிரில் உள்ள சாலையில் அமைந்துள்ளது.

மிருகஷீரிஷம் ஆதிநாராயணப் பெருமாள் கோவிலுக்குச் சென்று வழிபட வேண்டும்.

திருவாதிரை : அபய வரதீஸ்வரர் ஆலயத்திற்குச் சென்று வழிபாடு செய்ய வேண்டும்.

புனர்பூசம் : அதிதீஸ்வரர் திருக்கோவிலை வழிபாடு செய்யுங்கள். இந்தக் கோவில் பழைய வாணியம்பாடியில் அமைந்துள்ளது.

பூசம் : அட்சய புரீஸ்வரர் திருக் கோவிலில் சென்று வழிபட வேண்டும்.

ஆயில்யம் : கடற்கடேஸ்வரர் ஆலயத்தில் சென்று வழிபாடு செய்தால் நன்மை கிட்டும்.

மகம் மகாலிங்கேஸ்வரர் திருக்கோவிலில் வழிபட வேண்டும். பூரம் : ஸ்ரீஹரி தீர்த்தேஸ்வரர் திருக்கோவிலுக்குச் சென்று வழிபட வேண்டும். 

உத்தரம் : மாங்கல்யேஸ்வரர் திருக்கோவில் சென்று வழிபடுங்கள். 

அஸ்தம் : கிருபா கூபாரேச்வரர் திருக்கோவில். இந்த ஆலயம் கோமல் என்ற ஊரில் உள்ளது. கும்பகோணத்தில் இருந்து மயிலாடுதுறை செல்லும் சாலையில் இருக்கிறது 

சித்திரை : சித்திரரத வல்லபபெருமாள் திருக் கோவிலில் சென்று வழிப்பட்டால் நன்மைகள் கிட்டும்.

சுவாதி : சித்துக்காடு என்ற ஊரில் உள்ளதாத்திரீஸ்வரர் திருக்கோயில் சென்று வழிபட வேண்டும்.

விசாகம் : முத்துக்குமாரசாமி திருக்கோயிலுக்கு சென்று வழிப்பட்டு வந்தால் நன்மைகள் கிட்டும்.

அனுஷம் மகாலட்சுமிபுரீஸ் வரர் திருக்கோவில்.

கேட்டை வரதராஜப் பெருமாள் ஆலயத்திற்குச் சென்று வழிபடுங்கள்.

மூலம் : இந்த நட்சத்திரகாரர்கள் சிங்கீஸ்வரர் திருக்கோவில் கோவிலில் வழிபட வேண்டும்.

பூராடம் : இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், வழிபட வேண்டிய ஆலயம், ஆகாசபுரீஸ்வரர் திருக்கோவில். 

உத்திராடம் : இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவிலில் வழிபாடு செய்ய வேண்டும். 

திருவோணம் : இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோவிலில் வழிபாடு செய்ய வேண்டும்.

அவிட்டம் : இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், பிரம்மஞானபுரீஸ்வரர் ஆலயத்தில் வழிபட வேண்டும்.

சதயம் : இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், அக்னிபுரீஸ்வரர் ஆலயம். இது திருப்புகலூர் என்ற இடத்தில் உள்ளது. 

பூரட்டாதி : இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், திருவானேஷ்வர் திருக்கோயிலிலுக்கு சென்று வழிபட வேண்டும்.

உத்திரட்டாதி : இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், வழிபட வேண்டியது, சகஸ்ரலட்சுமீஸ்வரர் திருக்கோவில்.

ரேவதி : இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், வழிபட வேண்டியது, கயிலாயநாதர் ஆலயமாகும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

27 Stars Temples workship


கருத்துக் கணிப்பு

மத்திய அரசை ப.சிதம்பரம் விமர்ச்சிப்பதை தடுக்கவே இந்த சிபிஐ ரெய்டு - செல்வப்பெருந்தகையின் இந்த குற்றச்சாட்டு?Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசை ப.சிதம்பரம் விமர்ச்சிப்பதை தடுக்கவே இந்த சிபிஐ ரெய்டு - செல்வப்பெருந்தகையின் இந்த குற்றச்சாட்டு?
Seithipunal