இன்றைய (22.10.2022) ராசிபலன்.. இன்று யார்யாருக்கு அதிர்ஷ்டம்.. - Seithipunal
Seithipunal


 

மேஷம்

இன்று செல்லும் வெளியூர் பயணங்களின் மூலம் நல்ல ஆதாயம் கிடைக்கும். கல்வியில் நல்ல முன்னேற்றம் அடைவீர்கள். தடைபட்டு நின்ற பூர்வீகச் சொத்துக்கள் கைக்கு வந்து சேரும்.

ரிஷபம்

பல நாள் எதிர்பார்த்த வங்கிக் கடன்கள் தடையில்லாமல் கிடைக்கும். அரசாங்கத்தின் மூலமாக புதிய ஒப்பந்தங்கள் உருவாக வாய்ப்பு. கடுமையான போட்டிக்குப் பின்னர் காண்ட்ராக்ட் கிடைக்கும்.

மிதுனம்

இன்று சகோதர உறவுகளால் சில சஞ்சலங்கள் உண்டாகும் நாள். வெளியூர் பயணங்களால் சற்று அலைச்சல் அதிகமாகும். உடல் ரீதியாக கோளாறுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. பண விரயம் ஏற்படும்.

கடகம்

விவசாயம் சிறப்பாக இருக்கும். நல்ல லாபம் கிடைக்கும். தொழிற்சாலையில் பொருள் உற்பத்தி பெருகவும் வாய்ப்புண்டு.

சிம்மம்

எடுத்த காரியத்தில் தடை ஏற்படுவதால் சற்று மனச்சோர்வு ஏற்படும். கடன் காரணமாக சொத்துக்களை விற்றவர்கள் புதிய சொத்துக்கள் வாங்குவதற்கு நல்ல நாள்.

கன்னி

இன்று நம்பியவர்கள் தக்க சமயத்தில் கை கொடுக்க மாட்டார்கள். பணியிடங்களில் பக்குவமாக நடந்து கொள்வைத்து நல்லது. டீக்கடையில் அமர்ந்து கொண்டு தேவையற்ற விவாதங்கள் செய்ய வேண்டாம்.

துலாம்

இன்று கையில் பணம் தாராளமாக தாண்டவம் ஆடும் நாள். நீங்கள் எதிர்பார்த்ததைவிட தொழிலில் நல்ல முன்னேற்றம் காணப்படும். பிள்ளைகளால் பெற்றோருக்குப் பெருமை உண்டாகும்.

விருச்சிகம்

பலநாட்களாக நடைபெற்றுவரும் பிரச்சனைகளில் இருந்து விடுபட்டு மகிழ்ச்சி அடையும் நாள். குடும்பத்தில் இருந்த சங்கடங்கள் ஒவ்வொன்றாக விலகும். குடும்ப நலனுக்காக பெண்கள் சேமிப்பைத் தருவார்கள்.

தனுசு

இன்று மனைவி பிள்ளைகளுடன் வெளியூர் பயணம் செல்வீர்கள். மேம்போக்காக சுற்றித்திரிந்த உங்களுக்கு சேமிப்பில் நாட்டம் அதிகரிக்கும். பழைய கடன்களை அடைக்கும் முயற்சியில் இறங்குவீர்கள்.

மகரம்

உங்களிடம் இருந்து உதவி பெற்றவர்களே உங்களுக்கு எதிராக திரும்புவார்கள். கூட இருந்து குழி பறிக்கும் முயற்சியில் இறங்குவார்கள். ஐந்தாம் நபரை 
அடையாளம் கண்டு வெற்றி பெறுவீர்கள்.

கும்பம்

உங்கள் பேச்சாலும் செயலாலும் மற்றவர்களைக் கவரம் நாள். இல்லாதவருக்கு உதவி செய்வதன் மூலம் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். அரசாங்கப் பதவிகள் உங்களைத் தேடி வரும்.

மீனம்

நீங்கள் நல்லதே சொன்னாலும் மற்றவர்கள் தப்பாகப் புரிந்து கொள்வார்கள். குடும்பத்தினரின் செய்கையால் மனக் குழப்பம் உண்டாகும். இன்று யாரிடமும் கடன் வாங்காதீர்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

22102022 today rasipalan


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->