வெற்றிகரமாக இந்நாளை தொடங்க... இன்றைய தினப்பலன்கள்...!! - Seithipunal
Seithipunal


மேஷம்:

சுபகாரியம் தொடர்பான செயல்பாடுகளில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகம் ரீதியான வெளிவட்டார நட்பு கிடைக்கும். தொழில் முதலீடுகளில் கவனம் வேண்டும். கலை சார்ந்த பொருட்களின் மீதான ஆர்வம் அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள். ஜெயமான நாள்.

ரிஷபம்:

இனம்புரியாத சிந்தனைகளின் மூலம் சோர்வு ஏற்படும். உடன்பிறந்தவர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். காப்பீடு சார்ந்த பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். எழுத்து சார்ந்த துறைகளில் கற்பனை தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். சிந்தித்து செயல்பட வேண்டிய நாள்.

மிதுனம்:

பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் சுபகாரியங்களில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். புதிய நபர்களிடம் உரையாடும் பொழுது வார்த்தைகளில் கவனம் வேண்டும். ஆடம்பர செலவை தவிர்ப்பதன் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். ஆதரவு கிடைக்கும் நாள்.

கடகம்:

மனதிற்கு நெருக்கமானவர்களின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். வியாபார போட்டிகளை வெற்றி கொள்வீர்கள். உத்தியோக பணிகளில் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும். வெளியூர் பயணங்களால் அனுகூலம் உண்டாகும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். எண்ணங்களில் மாற்றம் உண்டாகும். அமைதி நிறைந்த நாள்.

சிம்மம்:

உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உயர்கல்வி தொடர்பான செயல்பாடுகளில் தெளிவு பிறக்கும்.  மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். புதிய இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். பயணங்களில் சில அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் ஏற்படும். வரவுகள் மேம்படும் நாள்.

கன்னி:

செய்கின்ற முயற்சியில் சாதகமான பலன்கள் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே சிறு சிறு விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு சாதகமாகும். உறவினர்களின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வியாபார ரீதியான வெளியூர் பயணங்கள் சென்று வருவீர்கள். பொருளாதாரம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். விவேகம் வேண்டிய நாள்.

துலாம்:

எதிலும் வேகத்தை விட விவேகத்துடன் செயல்படுவது நல்லது. பழக்கவழக்கங்களில் மாற்றம் ஏற்படும். முக்கிய முடிவுகளில் நிதானம் வேண்டும். குடும்ப உறுப்பினர்களிடம் சூழ்நிலைக்கேற்ப அனுசரித்து செல்லவும். வியாபார பணிகளில் மந்தமான சூழ்நிலைகள் காணப்படும். மாணவர்களுக்கு மறதி தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். அனுசரித்து செல்ல வேண்டிய நாள்.

விருச்சிகம்:

குடும்பத்தில் அமைதியான சூழ்நிலைகள் காணப்படும். பிள்ளைகளின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். வியாபார பணிகளில் தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும்.  அனுகூலமான நாள்.

தனுசு:

மனதில் பலதரப்பட்ட சிந்தனைகளின் மூலம் குழப்பம் ஏற்படும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். வியாபார நிலுவை பாக்கிகள் வசூலாகும். புதுவிதமான பொருட்களின் மீது ஆர்வம் உண்டாகும். உணர்ச்சிபூர்வமாக செயல்படுவதை குறைத்து கொள்வது நல்லது. இழுபறியான சில விஷயங்களுக்கு தெளிவான முடிவுகள் பிறக்கும். இன்பம் நிறைந்த நாள்.

மகரம்:

மனதில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். புதுவிதமான இலக்குகள் உண்டாகும். நண்பர்களின் ஆலோசனைகள் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும். உடலும், மனமும் புத்துணர்ச்சியுடன் காணப்படும். விருந்தினர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உருவாகும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். அன்பு நிறைந்த நாள்.

கும்பம்:

மனதளவில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். பொருளாதாரம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். நெருக்கமானவர்கள் பற்றிய புரிதல் மேம்படும். சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு பலதரப்பட்ட அனுபவங்கள் ஏற்படும். உத்தியோக பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். மேன்மை நிறைந்த நாள்.

மீனம்:

வியாபாரம் சம்பந்தமான பணிகளில் சில நுட்பங்களை அறிந்து கொள்வீர்கள். வாழ்க்கைத்துணைவருடன் சிறு தூரப் பயணங்கள் சென்று வருவீர்கள். ஆராய்ச்சி சார்ந்த கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். எழுத்து சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு அனுகூலம் ஏற்படும். உடன்பிறந்தவர்களின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள். வெற்றி நிறைந்த நாள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

17 dec rasipalan


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->