வந்தியதேவனுக்கு வந்த சோதனையை பாத்தீங்களா.?! இணையத்தை கலக்கும் 2K பொன்னியின் செல்வன்.! - Seithipunal
Seithipunal


கோலிவுட் திரையுலகில் பிரபல இயக்குநர் மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் முதல் பாடம் திரைப்படம் கடந்த ஆண்டு திரையரங்கில் வெற்றிகரமாக ஓடியது. இப்படத்தில் விக்ரம் ஜெயம் ரவி, ஐஸ்வர்யா லட்சுமி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, பார்த்திபன் போன்ற முக்கிய நடிகர்கள் நடித்துள்ளார்கள்.

மேலும், பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் வெளியீட்டு தேதி அறிவிக்கபட்ட நாளிலிருந்தே  திரைபடத்திற்கு ரசிகர்கள் ஆவலாய் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர். 
மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் சமீபத்தில் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் திரையரங்குகளில் வெளியாகியது. 

இதனை ஒரு வாரத்திற்கு முன்பாகவே ரசிகர்கள் முன்பதிவு செய்து சென்று பார்த்து வருகின்றனர். இந்த படத்தை பார்த்த பலரும் அப்படத்தின் ஒவ்வொரு கதாப்பாத்திற்கும் ரசிகர்களாகி வருகின்றனர்.

இந்த நிலையில், தற்போது வந்திய தேவன் கதாப்பாத்திரத்தில் நடித்த கார்த்தியை போலவும், குந்தவை திரிஷாவை போலவும் ரீகிரியேஷன் வீடீயோ ஒன்றை சிலர் உருவாக்கி வெளியிட்டுள்ளனர். பார்ப்பதற்கு வேடிக்கையாக இருந்தாலும் அவர்களது திறமை நம்மை வியப்பூட்டும் விதமாக இருக்கின்றது. இந்த வீடீயோவை பலர் கலாய்த்து கமெண்ட் அடித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Vanthiyathevan Reagreation Video Goes Viral


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->