பயனாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றிய ட்விட்டர் நிறுவனம்..! - Seithipunal
Seithipunal


உலகில் உள்ள அனைத்து மக்களும் பயன்படுத்தும் ஒரு பொதுவான சமூக வலைத்தளமாக உள்ள ட்விட்டர், தற்போது தனது சேவையில் புதிய வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது. அதன் அடிப்படையில், பயனர்களின் நீண்ட நாள் கோரிக்கையாக ட்விட்டரில் எடிட் செய்யும் வசதி இருந்து வருகிறது. 

இந்த கோரிக்கையை கடந்த மாதம் சோதனை முறையில் 'ட்விட்டர் புளூ' சந்தாதாரர்களுக்கு வழங்குவதாக ட்விட்டர் நிறுவனம் அறிவித்தது. அதாவது அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளில் 5 டாலர் வரை கட்டணம் செலுத்தும் சந்தாதார்களுக்கு இதனை அறிமுகப்படுத்த உள்ளது. 

இந்நிலையில், ட்விட்டர் நிறுவனம் எடிட் செய்யும் வசதியை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. இதையடுத்து எடிட் பட்டன் எவ்வாறு வேலை செய்யும் என்றும் அந்த நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. 

இதுகுறித்து ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளதாவது, "பதிவை ட்வீட் செய்த 30 நிமிடங்களில் சில முறை திருத்த முடியும். பிறகு 'கடைசியாக திருத்தப்பட்டது' என்று அந்த நேரமும் பதிவில் காட்டப்படும். அதுமட்டுமல்லாமல், தவறான பதிவுகளையும் பார்க்கும் 'ஹிஸ்டரி' என்ற வசதியும் உள்ளது. இதன் மூலமாக எடிட் செய்யப்பட்டது என்பதை பார்வையாளர்கள் அறிய முடியும்" என்று ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

twitter company new facilities on publish


கருத்துக் கணிப்பு

பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கான 10% இட ஒதுக்கீட்டை காங்கிரஸ், மார்க்சிஸ்ட், பாஜக வரவேற்று இருப்பது பற்றி உங்களின் பார்வைAdvertisement

கருத்துக் கணிப்பு

பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கான 10% இட ஒதுக்கீட்டை காங்கிரஸ், மார்க்சிஸ்ட், பாஜக வரவேற்று இருப்பது பற்றி உங்களின் பார்வை
Seithipunal