பரமா.. மரண பயத்தை காமிச்சிட்டாங்க பரமா.. ஸ்டேட்டஸ் சம்பவத்தை மீம் போட்டு செய்யும் நெட்டிசன்கள்.! - Seithipunal
Seithipunal


அமெரிக்காவைச் சேர்ந்த சமூக வலைதளமான ஃபேஸ்புக்கின் துணை நிறுவனமாக வாட்ஸ் அப் இருக்கிறது. இது உலகம் முழுதும் வரவேற்பை பெற்றுள்ளது. தனது பயனாளிகள் குறித்த தகவல்களை பேஸ்புக் நிறுவனத்துடன் பகிர்ந்து கொள்ள போவதாகவும், புதிய கொள்கையை வாட்ஸ்அப் சமீபத்தில் கூறியிருந்தது. 

பிப்ரவரி 8-ஆம் தேதிக்குள், இதனை ஏற்காவிட்டால் வாட்ஸ் அப்பை பயன்படுத்த முடியாது என்று அந்த நிறுவனம் அறிவித்திருந்தது. இதற்கு இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியது. எனவே, மக்கள் வேறு செயலிகளுக்கு மாறி வருகின்றனர். 

இதனை தொடர்ந்து புதிய கொள்கையை அமல்படுத்துவது மே 15 ஆம் தேதி வரை ஒத்தி வைக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில், தன்னுடைய பயனாளர்களுக்கு விளக்கமளிக்கும் வகையில் வாட்ஸ்அப் நிறுவனம் ஸ்டேட்டஸ் வைத்து இருக்கின்றது. இந்த ஸ்டேட்டஸில், உங்களுடைய குறுஞ்செய்தி, இருப்பிடம் உள்ளிட்ட எந்தவித தனிப்பட்ட தகவல்களையும் கண்காணிக்க மற்றும் வெளியிட மாட்டோம். உங்களுடைய தொடர்பு எண்களை ஃபேஸ்புக்கில் பகிர மாட்டோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், துவக்கத்தில் இருந்தே வாட்ஸப்பின் அறிவிப்பை கலாய்த்து வந்த நமது ஊர் நெட்டிசன்கள், தற்போது வாட்சப் நிறுவனத்தின் பதில் ஸ்டேட்டஸையும் மீம் போட்டு கலாய்த்து வருகின்றனர். மேலும், இது குறித்த பதிவில், போன் நம்பரை சேமித்து வைக்காமலேயே வாட்சப் ஸ்டேட்டஸ் எப்படி காண்பிக்கிறது? என்றும், மார்க்கிற்கு மரண பயத்தை காண்பித்தது போலவும் மீம் தயாரித்து ட்ரெண்டிங் செய்து வருகின்றனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Trending Meme about WhatsApp Privacy Policy Upgrade Notification and Status


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->