தமிழீழ விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் புதிய புகைப்படமா? உண்மை என்ன?! - Seithipunal
Seithipunal


தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வே. பிரபாகரனின் புதிய புகைப்படம் என்று ஒரு புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படத்தின் உண்மைத் தன்மை இதுவரை உறுதியாக நிலையில், வெளியான புகைப்படத்தில், நரைத்த தாடியுடனும், சிரித்த முகத்துடனும் பிரபாகரன் காட்சிய அளிக்கிறார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வே. பிரபாகரன் நலமாக இருப்பதாக நேற்று பழ. நெடுமாறன் பரபரப்பு அறிக்கையும், தொடர்ந்து பேட்டியும் அளித்திருந்தார்.

அதுமுதல், தமிழகத்தின் அரசியல் கட்சி தலைவர் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

சீமான் வெளியிட்ட கருத்து பல்வேறு விவாதங்களை உருவாக்கியது. பிரபாகரன் உயிருடன், நலமுடன் இருப்பதை வரவேற்றுத் சில தலைவர்கள் தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

அதே சமயத்தில் ஒரு சில தலைவர்கள், பிரபாகரன் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என்று கருத்து தெரிவித்தனர்.

இந்நிலையில், பிரபாகரனின் புதிய புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இது உண்மையா, அல்லது சித்தரிக்கப்பட்டதா? என்பது குறித்த அதிகாரபூர்வ தகவல் ஏதும் கிடைக்கப்பெறவில்லை.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Prapakaran new viral pic 2023


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->