வாட்ஸ்அப் சாட்களை பழைய செல்போனில் இருந்து புதிய செல்போனுக்கு மாற்ற வேண்டுமா? - இதோ உங்களுக்காக.!!  - Seithipunal
Seithipunal


வாட்ஸ்அப் சாட்களை பழைய செல்போனில் இருந்து புதிய செல்போனுக்கு மாற்ற வேண்டுமா? - இதோ உங்களுக்காக.!! 

பிரபல சமூக வலைத்தளமான வாட்ஸ்அப்பை உலக அளவில் சுமார் 200 கோடிக்கும் மேற்பட்ட பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த செயலியின் மூலம்  ஒருவருக்கு ஒருவர், ஒருவருக்கு பலர் என்று தங்களது தகவல்களை பரிமாறிக் கொண்டு வருகின்றனர்.

இந்த செயலியில் புகைப்படம், மொபைல் நம்பர், வீடியோ கால் என்று பல அம்சங்கள் உள்ளன. இப்படி பல நுட்பங்களைக் கொண்டுள்ள இந்த வாட்ஸ்அப் அவ்வப்போது புதிய அப்டேட்களையும், அம்சங்களையும் அறிமுகம் செய்வது வழக்கம். 

அந்த வகையில் வாட்ஸ்அப் நிறுவனம் பயனர்கள் தங்கள் சாட்களை பழைய போனிலிருந்து புதிய போனுக்கு மாற்றுவது குறித்து புதிய அம்சத்தை கொண்டு வந்துள்ளது. அதன் விவரம் பின்வருமாறு.

முதலில் பயனர்கள் பழைய போனில் வாட்ஸ்அப் செயலியில் உள்ள செட்டிங்ஸ்க்கு செல்ல வேண்டும். அதில் ‘சாட்ஸ்’ ஆப்ஷனை தேர்வு செய்து உள்ளேச் சென்று டிரான்ஸ்ஃபர் சாட் ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்.

தேர்வு செய்தவுடன் க்யூஆர் கோடு வரும். இதனை அப்படியே வைத்துவிட்டு புதிய போனில் வாட்ஸ்அப் இன்ஸ்டால் செய்து, அதே போன் எண்ணை கொண்டு பதிவு செய்ய வேண்டும். பின்னர் பழைய போனில் உள்ள க்யூஆர் கோடினை புதிய போனில் ஸ்கேன் செய்ய வேண்டும்.

இல்லையென்றால் இதனை பேக்-அப் ஆப்ஷன் மூலமாகவும் ஸ்கேன் செய்ய முடியும். இதன் மூலம் பயனர்கள் தங்கள் சாட்களை பழைய போனில் இருந்து சுலபமாக புதிய செல்போனுக்கு மாற்றிக் கொள்ளலாம்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

new update on whatspp


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->